அன்னையர் தினம் இன்று உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகிறது.
அன்னையர்களை பெருமைப்படுத்தும் நோக்கில் 1908 ஆம் ஆண்டு அண்ணா ஜாவிஸினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் 1914 ஆம் ஆண்டு முதல் விசேடமாக அமெரிக்காவில் அன்றைய தினம் விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இலங்கையிலும் இன்றைய தினம் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண் என்பவள் பூப்பெய்தும் வயதை அடைந்து, திருமண பந்தத்தில் இணைந்து, கருவுற்று தாயாகி குழந்தையை பெற்றதும் முழுமை அடைகிறாள். பிரம்மா இவ்வுலகில் உள்ள உயிர்களை படைக்கிறார்கள் என்றால் பெண்ணும் அதே பணியை செய்கிறாள். பெண் என்பவள் இரு முறை பிறக்கிறாள் என்பார்கள். அதாவது அவளது தாய், தந்தைக்கு மகளாக பிறக்கும் போது ஒரு முறையும், அவளது வயிற்றில் குழந்தையை சுமந்து பிரசவிக்கும்போது ஒரு முறை என பெண் மறுஜென்மம் எடுக்கிறாள்.
பிரசவம் என்பது பெண்ணுக்கு தாள முடியாத வலியை கொடுக்கும் என்றாலும் அவை அனைத்தையும் தாங்கி கொண்டு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் அதை மறந்து விடுகிறாள். தான் உண்ணாமல் தன் குழந்தை உண்ண வேண்டும் என்று நினைக்கும் ஒரே உள்ளம் தாய் தான். பார்த்து பார்த்து ஒரு குழந்தையை கருவுற்று இருக்கும் போதில் இருந்தே கண்ணை இமை காப்பதற்கு மேலாக தன் குழந்தையை பாதுகாத்து வருகிறாள்.
தம்மை வளர்க்க தாய் பட்ட பாடுகளை மறந்த சில பிள்ளைகள் தன் தாய்க்கு ஒரு பிடி உணவு அளிக்க மனதளவில் முடியாமல் போய், அந்த தாய்க்கு மூன்று பிள்ளைகள் என்றால் மாதம் ஒருவர் பராமரிப்பது என்று கணக்கு போடுகின்றனர். அவர் இருக்கும் போது ஒரு பிடி உணவுக்கு சண்டையிட்டு கொள்ளும் சகோதரர்கள் அவர் இறந்த பின்னர் வடை, பாயாசம் என அறுசுவை உணவுகளை செய்து படைப்பதில் என்ன பயன். இருக்கும் போதே நம் அன்னையர்களை அன்பு உள்ளத்தோடு அரவனைப்போம்..
இந்த உலகில் உள்ள அத்தனை மனித பிரிவிகளுக்கும் ஒரு உறவு கட்டாயம் இருக்கும் என்றால் அது அம்மா தான். ஒரு பெண்ணால் தான் இந்த உலகில் குழந்தை பெற்றெடுக்க முடியும் என்பதால் இந்த உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் தாய் என்பவள் இருப்பாள்.
வஞ்சகம், ஏமாற்று, வெறுப்பு, என பல மோசமாக சக்திகள் நிறைந்த இந்த உலகில் தாய் ஒருவள் தான் தன் குழந்தைக்கு கட்டுப்பாடற்ற அன்பையும், பாசத்தையு் வெளிகாட்டுபவள். நம்முடன் பிறந்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் நம்மை பிரிந்து செல்லக்கூடும். ஆனால் எந்த காலத்திலும் பிரியாது நம்முடன் இருப்பவர் தான் தாய்.
இந்த தாயின் மகத்துவத்தை அறிந்து அதை போற்றும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தில் நாம் நம்மை பெற்ற அன்னையர்களை போற்றி புகழ்ந்து வாழ்த்துவோம்.
அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மரியா ஜீவ்ஸ் ஜர்விஸ் என்பவரின் மகள் அன்னா மேரி ஜர்விஸ். தனது அம்மாவின் உந்துதலின் பேரில் அமெரிக்காவில், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக ”மதர்ஸ் டே ஒர்க் கிளப்” என்ற அமைப்பை உருவாக்கினர். இதன் மூலம் அடிக்கடி மருத்துவர்களை வரவழைத்து, தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு, பேணி காத்தல், ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, எவ்வாறு கல்வி கற்பிப்பது போன்ற பயிற்சிகளை அளித்தார்.
ஒருமுறை தனது தாய் நடத்தி வந்த ஞாயிற்றுக் கிழமை பள்ளியில் போதித்துக் கொண்டு இருக்கும்போது, அன்னையைப் போற்றுவதற்கு ஒரு நாள் ”அன்னையர் தினம்” வரும் என்று பாடி இருந்தது அவரது காதுகளிலும், நினைவிலும் வந்து வந்து சென்றது. இந்நிலையில் அவரது அம்மா 1905ஆம் ஆண்டில் இறந்துவிட, அவரது ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில், 25 ஆண்டுகள் அவரது அம்மா போதித்து வந்த ஆண்ட்ரூஸ் சர்ச்சுக்கு, 1908, மே 10ஆம் தேதி, அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்கு பூச்செண்டுகள் கொடுத்து அனுப்பினார்.
அன்றைய தினத்தை அன்னையர் தினமாகவே கொண்டாடினார். அன்னையர் தினத்தை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து அன்னா மேரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் 28 வது அதிபரான தாமஸ் வுட்ரூ வில்சன், அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் 1914, மே 9 ஆம் தேதி கையெழுத்திட்டார். இதையடுத்து, அன்னையர்களுக்கு மரியாதை, அன்பு செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 2வது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படும், அன்று தேசிய விடுமுறை விடப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது.
அப்படி பிறந்தது தான் அன்னையர் தினம்.
அன்னையர் தினத்தில் அம்மாவிற்கு என்ன பரிசு கொடுக்கலாம்..?
உலக அன்னையர் தினத்தன்று தாய்மையைப் போற்ற சிறந்த தருணமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களுக்கான வாழ்த்துச் செய்திகளை அனுப்பி மகிழ்ச்சியாக்குங்கள்.
உங்கள் அம்மாவின் ஈடு இணையில்லா அக்கறை மற்றும் அரவணைப்பை அங்கீகரிக்க ஒரு சிறந்த நாள் அன்னையர் தினம். அன்று, உங்கள் அம்மாவிற்கு ஏதேனும் பரிசு அளித்து அசத்துங்கள்.
காஃபி மக் : உங்கள் அம்மா காலை அருந்தும் காஃபி இனிதாக மாற அவருடைய முதல் சுவை உங்கள் அன்பு நிறைந்த காஃபி மக்காக இருக்க வேண்டும். அம்மாவைச் சிறப்பிக்கும் வாக்கியங்கள், அவருடைய புகைப்படங்கள் போன்ற மறக்க முடியாத நினைவுகளைப் பதித்து அந்த காஃபி மக் பரிசளியுங்கள்.