எப்போதாவது உலகின் மிக வேகமான அபத்தான விலங்குகளை வீட்டில் குழந்தைகளுடன் வளர்க்க நினைத்ததுண்டா? வாய்ப்பே இல்லை. ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு ஒருவேளை உங்கள் எண்ணம் மாறலாம்.
ஒரு வயது மற்றும் 3 வயது குழந்தைகள் கொண்ட வீட்டில் இரண்டு சிறுத்தைகளை வளர்த்து வருகிறார்கள் ஹெய்ன் மற்றும் அவரது மனைவி கிம். அந்த குழந்தைகள் அவை மீது அதீத அன்பு வைத்திருப்பதுடன் எவ்வித பயமும் இல்லாமல் அவற்றுடன் விளையாடுகிறார்கள். நாய் போன்று சிறுத்தைகளை தங்களுடன் வெளிபுறத்திற்கு அழைத்து செல்கிறார்கள்.
சிறுத்தைகளால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்துள்ள தம்பதிகள், தங்கள் குழந்தைகளுக்கு அவற்றூடன் எப்படி பாதுகாப்பகாக பழகுவது என்று கற்றுக்கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்