உலகின் முதல் 3D அச்சிடப்பட்ட மூளை திசுக்களை வெளியிட்ட விஞ்ஞானிகள்

143

 

 

உலகின் முதல் 3டி பிரிண்ட் செய்யப்பட்ட

மூளை திசுக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இது மனித மூளையில் உள்ள இயற்கையான திசுக்களைப் போல செயல்படும் என்று ‘Neuroscience’ இதழில் சமீபத்தில் வந்த கட்டுரை கூறுகிறது.

செயற்கையாக தயாரிக்கப்பட்ட ‘3D printed brain tissue’ நரம்பியல் பிரச்சனைகளுக்கான சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Parkinson மற்றும் Alzheimer நோய்க்கான சிகிச்சையில் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு இது பங்களிக்கும் என்று நம்புகின்றனர்.

மனித மூளையில் உள்ள திசு செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு சக்திவாய்ந்த மாதிரியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

SHARE