உலகம் முழுவதும் பல நாடுகளிலும் கடந்த 150 ஆண்டுகளில் இனப்படுகொலைகள் என்ற பெயரில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை லட்சமோ, கோடியோ அல்ல; மில்லியன்களைத் தாண்டுகிறது என்பதுதான் உண்மை.
ஓர் இனத்தின் அல்லது அந்தக் குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, குழு உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதே இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது. ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களை கொத்துக்கொத்தாகக் கொன்று குவிப்பதுடன், அடுத்த தலைமுறை உருவாக விடாமல் தடுப்பதே இனப்படுகொலையாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, ஓர் இனத்தை அது இருந்த சுவடே தெரியாமல் அழிப்பதாகவும் கருதப்படுகிறது. நாகரிகமடைந்த தற்போதைய 21-ம் நூற்றாண்டிலும் இனப்படுகொலைகள் ஏன் தொடர்கின்றன? அதற்கான காரணம் என்ன என்று என்றைக்காவது யோசித்திருக்கிறோமா? அதனை நினைவூட்டவே இக்கட்டுரை…
1.ஆர்மீனியர்களின் இனப்படுகொலை (1915 – 1923)
துருக்கியைச் சேர்ந்த ஓட்டோமன் பேரரசு, முதல் உலகப்போர் தொடங்கும் சமயத்தில் தங்களது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள அந்தப் போரில் ஈடுபட முடிவு செய்தது. ஏற்கெனவே இழந்த செல்வாக்கினை மீட்க இது உதவும் என்று நம்பி அவர்கள் அதில் இறங்கினர். முதல் உலகப்போரில் ஜெர்மனியோடு களம் கண்டது ஓட்டோமன். உள்நாட்டில் அதிகாரச்சண்டை அந்நாட்டிற்கு மற்றொரு தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில் நிறைய புரட்சி இயக்கங்கள், நாடு முழுவதும் பலவாறாகத் தோன்றின. இதற்கெல்லாம் காரணம் யார் என்று ஆராய்ந்தபோது, ஆர்மீனியர்கள்தான் என்று விழித்துக்கொண்டது. இதற்கிடையே முதல் உலகப்போர் தொடங்கியது. போரில் ஜெர்மனியோடு சேர்ந்த துருக்கி தோல்வியடைந்தது. இதனால், ஆர்மீனியர்கள் மீது மிகவும் கோபமடைந்தனர் ஓட்டோமன் பேரரசைச் சேர்ந்தவர்கள். ராணுவத்தின் மூலம் அவர்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, துரோகிகள் என அவர்கள் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்து கொல்லப்பட்டனர். இவ்வாறாக 1915 முதல் 1918-ம் ஆண்டுவரை ஓட்டோமன் அரசு, ஆர்மீனியர்களைக் கொன்றது. 5 முதல் 12 லட்சம் ஆர்மீனியர்கள் இதில் கொல்லப்பட்டனர். முதல் உலகப்போரில் ஆஸ்ரியர்கள் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு அடுத்து, கிரேக்கர்களும் கொல்லப்பட்டனர். 20-ம் நூற்றாண்டில் நடந்த இனப்படுகொலைகளில் ஆர்மீனிய இனப்படுகொலையே, முதல் இனப் படுகொலை என போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருத்து தெரிவித்தார்.
2. யூத இனப்படுகொலை (1939-1945)
ஹிட்லரால் ஜெர்மனியில் யூதர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சூழலில், யூதர்களை கொடுமைப்படுத்துவது, துன்புறுத்துவது, கொலைசெய்வது என இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. யூதர்கள் நெருக்கடியான பகுதிகளில் அடைத்துவைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர் வண்டிகள் மூலம் நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த வதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர்.
இரண்டு வகையான முகாம்களை நாஜிக்கள் அமைத்தனர். ஒன்று, சாதாரண கைதி முகாம். இதில் கைதிகளை அடிமைபோல் நடத்தி, அவர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவார்கள். தேவையில்லாமல் கொல்லமாட்டார்கள். இன்னொன்று வதை முகாம்கள், இவை யூதர்களை கொல்வதற்காகவே உருவாக்கப்பட்டது.
3. கம்போடியா இனப்படுகொலை (1975-1979)
1953-ம் ஆண்டு கம்போடியா ஃபிரான்ஸிடமிருந்து விடுதலை அடைந்தது. சிஹானக் கம்போடியா அரசனாகப் பொறுப்பேற்றார். கம்போடியன் கம்யூனிஸ்ட் கட்சியின் (கிமேர் ரூஜ் ) தலைவர் ஆன பால் பாட் (சலோத் சார்) சிஹானக்கிற்கு மிகவும் பிரச்னையாக இருந்தார். பின்னர் 1976-ல் பால் பாட் பிரதமராகப் பதவியேற்றார். வணிகம், மருத்துவம், தொழில்துறை எனப் பல துறைகள் எல்லாம் நிறுத்தப்பட்டன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என்று எண்ணினார் பால் பாட். அனைவரும் விவசாயம் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். மக்களின் சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டு, அரசால் கைப்பற்றப்பட்டது. ஆட்சியாளர்களை எதிர்த்து போராடிய மக்களைச் சிறையிலடைத்து சித்ரவதை செய்தும் பசி, பட்டினி மற்றும் சட்டவிரோதமான முறையிலும் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.
குருட்டுத்தனமான கொள்கையும், செயல்முறைப்படுத்தாத திறனும் மக்களை வாட்டின. சுமார் 20 லட்சம் மக்கள் இம்முறையில் செத்து மடிந்தனர். எந்தப் பிரச்னை வந்தாலும், உழைக்கும் வர்க்கம் சமாளிக்கும் என்று பால் பாட் முட்டாள்தனமாக நம்பியதே இதற்குக் காரணம்.
4. ருவாண்டா இனப்படுகொலை (1994)
ஜெர்மனியின் காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த நாடு ருவாண்டா, புருண்டி. இங்கு டூட்சி, ஹூட்டு என்ற இரண்டு இன குழுக்கள் வாழ்ந்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக டூட்சி இன மக்கள் ஆண்டுவர, பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு,1972-ல் புருண்டியில் ஹூட்டுகளின் புரட்சி தொடங்கியது. 1994 ஏப்ரல் 7 அன்று ஹூட்டு இன மக்கள், டூட்சி இனத்தவரை கொல்லத் திட்டமிட்டனர். பெரியவர், சிறியவர் எனப் பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் கொன்று குவித்தனர் ஹூட்டு இனத்தினர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5. போஸ்னியா இனப்படுகொலை (1992-1995)
ஓட்டோமன், ஆஸ்திரியா, ஹங்கேரி, யூகோஸ்லாவியாவிடமிருந்து பிரிந்த நாடு போஸ்னியா ஆகும். புதிதாக உருவாக்கப்பட்ட தேசம் என்பதால் நாடு முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. போஸ்னியர்கள், செர்பியர்கள், குரேஷியர்கள் என மூன்று வகையான இன மக்கள் வாழ்ந்து வந்தனர். குரேஷிய அதிபருக்கும், போஸ்னிய அதிபருக்கும் ஓர் ஒப்பந்தத்தில் முரண்பாடு ஏற்பட, அங்கிருந்து தொடங்கியது இப்பிரச்னை. போஸ்னியா மீது குரேஷியப் படையினர் 1993-ம் ஆண்டில் 2000 பேர் கொலை செய்யபட்டனர். 64 இஸ்லாமியர்களைக் கைது செய்து பேருந்தில் அடைத்து, தீவைத்துக் கொளுத்தினர். இதில் 56 பேர் இறந்தனர். செர்பிய ராணுவம் 1992-1995 காலகட்டத்தில் இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். நான்கு லட்சம் பேர் காணாமல் போனார்கள்.
6. தர்ஃபுர் – சூடான் இனப்படுகொலை
ஆப்பிரிக்காவின் சூடானில் உள்ள தர்ஃபுர் மாநிலத்தில் நடைபெற்ற இப்படுகொலை பொருளாதார ரீதியாக முக்கியமானதாகும். சூடானின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் சண்டையிட்டுக் கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தன. இந்நிலையில் மேற்கு சூடானில் உள்ள தர்ஃபுரில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வடக்கு மற்றும் தெற்கு பிரச்னை மேலும் கொளுந்துவிட்டு எரிந்தது. இவ்வாறாக 1972-ல் உள்நாட்டு யுத்தம் முடிந்தது. 1983-ல் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களில் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். 40 லட்சம் பேர் வீடுகளை இழந்து அகதிகளாகினர். 2003 பிப்ரவரியில் ‘எல் பஷீர்’ விமான நிலையத் தாக்குதலால் ஏற்பட்ட பிரச்னை இன்றளவும் தொடர்கிறது. ஜூலை 2011-ல் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது சூடான் அரசு.
7. இலங்கைத் தமிழர் படுகொலை
ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை ஒரு சில வரிகளில் விவரிக்க இயலாதவை. பெரும் வலியையும், ஆற்றாமையையும் இப்போதும் அந்த மண் ஒளித்து வைத்திருக்கிறது. இலங்கையில், தமிழர்கள் பெரும்பாலும் அரச பதவி வகித்ததைக் காரணம்காட்டி, சிங்கள அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்திற்காகத் தூண்டிவிட்ட கலவரச் சுவடு அவ்வளவு எளிதில் மறையாதது. 1983-ம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ என்ற அந்தச் சம்பவம் இன்றளவும் நீங்காவடுவாக தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. கண்ணில்பட்ட எல்லாரையும் கொன்று, பெண்கள் பலரும் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், படுகொலையும் செய்யப்பட்டனர். 1958, 1977, 1983-ம் ஆண்டுகளில் நடந்த இனக்கலவரங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஈழப் போராட்டம் வெடித்த பின்பு வானூர்திகளிலிருந்து கண்மூடித்தனமாக குண்டுவீசுதல், ஏவுகணை வீச்சு, நேரடித் தாக்குதல் போன்றவற்றின் மூலம் இதுவரை சுமார் லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாயினர். அவர்கள் மறைத்து வைத்திருக்கும் பெருந்துயரின் கேவல் அவர்களின் மவுனத்திலிருந்தே இன்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
1932-33-ல் உக்ரைனில் சோவியத் ஒன்றியம் ஏற்படுத்திய செயற்கைப் பஞ்சம், 1975-ல் கிழக்குத் திமோர் மீது இந்தோனேஷியா எடுத்த படையெடுப்பு இனப்படுகொலைகளாக முன்வைக்கின்றனர். அமெரிக்க செவ்வியந்தியர்கள், பாலஸ்தீனியர்கள், காங்கோ, சோமாலியா, கொசாவா என உலக நாடுகளின் வரலாற்றில் ‘இனப்படுகொலைகள்’ தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன
ஒரு சமூகப்பொருளாதார அரசியல் இராணுவ ரீதியிலான கண்ணோட்டம் இது. 2008
ஆம் ஆண்டை மகிந்த ராஜபக்ச ஒரு யுத்தஆண்டாக பிரகடனம் செய்தார். இதற்காக
யுத்த ஆண்டு செலவாக பதினாறாயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால்
உண்மையில் 2008 யுத்த செலவாக இருபதுநாயிரம் கோடி ரூபா செலவிடப்பட்டதாக
கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு தொகை இலங்கை வரலாற்றில் முன்னெப்போதுமே இல்லாத ஒரு தொகையாகும். 1965 ஆம் ஆண்டு காலஞ்சென்ற டட்லி செனநாயக்க பிரதமராக இருந்தபோது பாதுகாப்பு செலவீனமாக அறுபத்தொரு கோடி
ரூபாதான் ஒதுக்கியிருந்தது பலருக்கும் ஆச்சரியம் தரும் விடயமாக இருந்தது. ஆனால்
இந்தத் தொகை 197O ஆண்டுக்குப் பின்னர் காலஞ்சென்ற பிரதமர் சிறிமாவோ
பாண்டாரநாயக்க காலத்தில் ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சியை அடக்குகின்ற
நோக்கோடு அதிகரிக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்று இலங்கை
யின் பாதீட்டில் ஆறிலொரு பங்கை பாதுகாப்புச் செலவீனங்கள் விழுங்கிக் கொண்டிருக்கின்ற
1977ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசாங்கம் பதவிக்கு வந்தது. அவர்
1978ம் ஆண்டு இலங்கையை இரண்டாவது குடியரசாக பிரகடனப்படுத்தியதோடு
தன்னை ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் முன் நிலைப்
படுத்திக்கொண்டார். இதன் பின்னர் சந்திரிக்கா அம்மையாருடைய காலத்திலும்
மகிந்தராஜபக்ச காலத்திலும் பாதுகாப்புக்கென வரவுசெலவுத்திட்டத்தில் கோடிக்கக்
கான ரூபாய்கள் ஒதுக்கப்பட்டே வந்த இன்று இத்தொகையானது ஐந்து இலக்கங்
களைக்கொண்ட கோடிக்கணக்கான ரூபாய்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த
2OO8ம் ஆண்டு இலங்கைத்திதீவில் தமிழர் தாயகத்தில் இனப்படுகொலையானது
பல்வேறு பரிமாணங்களிற்கூடாக விசாலிப்புப்பெற்றது. விமானக்குண்டுகளை வீசி
பெருமளவில் தமிழ்பொதுமக்களை படுகொலை செய்யும் நிகழ்வு 2OO8ம் ஆண்டு
தான் நிகழ்ந்தது. இதுவரை ஆறாயிரம் தடவைகளுக்குமேல் தமது விமானங்கள்
வன்னிப்பெருநிலப்பரப்பின் மீது குண்டுகளை வீசியதாக பாதுகாப்புச் செயலாளர்
கோத்தபாய ராஜபக்ச பெருமிதப்பட்டுக்கொண்டார். இந்தக்குண்டுவீச்சில் கொல்லப்பட்ட
அப்பாவிப்பொதுமக்கள் பற்றி அவர் கிஞ்சித்தேனும் அவர் அக்கறைப்பட்டதாகத்தெரியவில்லை
எறிகணைவீச்சு, காமற்போதல், கடத்தல், கப்பம்பெறுதல் எ சட்டவிரோதமான
செயல்பாடுகள் மிக உயர்மட்டத்தின் ஆசீர்வாதத்தோடு நடைபெற்றது. ஒட்டுக்குழுக்களுக்கூடாகவும் இராணுவத்தின் ஊடாகவும் இந்த சட்டவிரோதமான செயற்பாடுகள் விசாலிப்புப்பெற்றன. இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள்
குற்றத்தீர்பில் இருந்து (Impunity) விதிவிலக்களிக்கப்பட்டார்கள். 2008 என்பது இராணுவரீதியாக தமிழர் தாயகத்தின்நிலப்பரப்புகளை சிங்களப்பேரினவாதம் ஆக்கிரமித்து நின்ற ஆண்டாகும். இந்த ஆக்கிரமிப்புக்காரணமாக இந்தஆண்டு தொடக்கத்திலிருந்து மக்கள் படிப்படியாக இடம்பெயரத்தொடங்கினார்கள். இலங்கை அரசாங்கம் அவர்களை தமது கட்டுப்பாட்டுப்பிரதேசங்களிற்கு வருமாறு அழைப்புகளை விடுத்தபோதும் அவற்றை தமிழ்மக்கள் முற்றாகவே நிராகரித்தார்கள் வவுனியாவில் ஏற்படுத்தப்பட்ட நலன்புரி நிலையங்கள் யாவும் திறந்தவெளி சிறைச்சாலைகளாக தமிழ் மக்களால் பார்க்கப்பட்டன. இதனால் பேரினவாதத்தால் மடு பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டபோது மன்னார் மாவட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றி முல்லைத்தீவு மேற்குப்பிரதேசங்களிற்கு இடம்பெயர்ந்தார்கள் அப்பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டபோது மக்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்தார்கள் மக்கள் எப்பொழுதுமே 2008ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலேயே தமது வாழ்விடங்களை அமைத்துக்கொண்டார்கள். இதன்மூலம் தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாத அரசிற்கு ஒருசெய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். தாம் எந்த விதமான இரானுவ ஆக்கிரமிப்பிற்கோ அடிபணிந்துசெல்ல தயாராக இல்லை. தமது சுயாதீனத்தை பேணிப்பாதுகாக்கவே தாம்எப்போதும் உறுதியோடு இருப்பதாக சர்வதேசசமூகத்திற்கு வெளியரங்கப்படுத்தியிருக்கிறார்கள். இதன்மூலம் மகிந்தராஜபக்ச அரசாங்கம் கிழக்கின் உதயம் என்றபெயரில் தென்தமிழீ ழத்தை ஆக்கிரமிப்புச் செய்ததுபோல் வடக்கின் வசந்தம் என்றபெயரில் வடதமிழீழத்தை ஆக்கிரமிப்புச்செய்ய முடியாமல்போய்விட்டது. வன்னிதளம் என்பது பல நூற்றாண்டு காலமாகஎத்தகைய ஆட்சியாளர்களிற்கும் அடிபணியாத ஒரு மண்ணாகவே இருந்துவந்திருக்கிறது. ஒல்லாந்தர்காலத்தில் கைலைவன்னியனும், இதன்பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பண்டாரவன்னியனும் அந்நிய ஆதிக்கசக்திகளுக்கு எப்பொழுதுமே நன்றி வேர்கள் இணையம் சிம்மசொப்பனமாகவே இருந்துவந்தார்கள் . கைலைவன்னியனை ஒரு காக்கைவன்னியனும் பண்டாரவன்னியை ஒரு கதிர்காமசேகரமுதலியும் காட்டிக்கொடுத்த கயாமத்தனம் காரமாகவே வன்னி அரசுகள் வீழ்ச்சியடைந்தன. ஆனால் வன்னிமக்கள் ஒல்லாந்தரையோ ஆங்கிலேயரையோ ஏற்றுக்கொள்ள வில்லை “யானையை அடக்கிய அரியாத்தையின் கதை” குருவிநாச்சியாரின் கதை, அன்னிய ஏகாதிபத்திய சக்த்திகளை எதிர்த்து வன்னிமக்கள் நடாத்திய வீரம்செறிந்த போர்முறைகளை வெளிக்கொணர்கின்றன. இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை 1987ம் ஆண்டு வல்வளைப்புச் செய்தபோதும் தமிழ்த்தேசியத் தலைமையை அழித்துவிடுவதற்கு பல்வேறு குறியீட்டுப்பெயர்களில் இராணுவ நடவடிக்கைகளைமேற்கொண்டபோதும் வன்னி மண் தமிழா தேசியப்போராட்டத்தையும் தமிழ்த்தேசியத் தலைமையையும் பாதுகாத்தமை இன்று வரலாற்றுப் பிரசித்தமாயிற்று. 2007ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ம் திகதி எமது தேசியத்தலைவர்ஆற்றிய மாவீரர் நாள் உரையில் மிகச் சுருக்கமாகக் கூறிய வாசகம் தற்போதைய இராணுவ சூழ்நிலையை தமிழ்த்தேசியத்தலைமை எவ்வாறு நோக்குகின்றது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைகிறது. இன்றைய சூழ்நிலை எமக்குப் புதியவையுமல்ல எமக்கு அவை பெரியவையுமல்ல என்ற அவரது வாசகம் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உரையில் அவர் சொல்லாமல் சொன்ன செய்திகள் இனி அடுத்துவரும் காலங்களில்போராட்டத்தின்போக்கை எதிர்வுகூறுவதாக அமைந்துள்ளன.
இலங்கை சமூகங்களின் உறவுகள்
2008 இல் இடம்பெற்ற சில மாகாணசபைத் தேர்தல்களின் பெருமளவு மோசடிகள் ஆள்மாறாட்டங்கள் அடாவடித்தங்கள் என்பன இடம்பெற்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில்இடம்பெற்ற மாகாணசபைத்தேர்தலில் ஒரு ஒட்டுக்குழு ஒன்றை வெல்லவைப்பதற்காக அங்குள்ள வாக்காளர்களது அடிப்படை மனிதஉரிமைகள் முற்றாகவே பறிக்கப்பட்டன. கொலைகள் கொள்ளைகள்,அச்சுறுத்தல்கள், கடத்தல்கள், கானமல்போதல்,பாலியல்வல்லுறவுகள் இப்பொழுது அங்கு சர்வசாதாரமாகஇடம்பெறுகின்றன. கிழக்கின் அபிவிருத்தி எற மகுடவாசகம இன்று வெறும் வெற்றுக்கோசமாகிப்போய்விட்டது. வடமத்திய மாகாண சபைத்தேர்தலிலும் சப்பிரகமுவ மாகாணசபைத்தேர்தலிலும் இடம்பெற்ற மோசடிகள் ஜனநாயக விழுமியங்களை கேலிக்குரியதாக்கிவிட்டுள்ளன. இந்த இரண்டுமாகாணத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றபோதிலும் சிங்கள மக்கள் அதற்கு ஆதரவளித்த போதிலும் யுத்த முனைப்புக்கள் தீவிரம் பெற்றிருக்கின்றன சிங்களப் பேரினவாத அரசு இனிமேல் இலங்கை வாழ் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இன ஒற்றுமையென்பது எந்தவகையிலும் ஏற்படாத வண்ணம் பிளவுகளை2008ம் ஆண்டு ஏற்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர் சுனந்த தேசபிரிய செனநாயக்க குறிப்பிட்டுள்ளார். இது பொருள் பதிந்த வாசகமாகும். சிங்களமக்கள் மத்தியில் வடக்கே இறக்கும்சிங்களசிப்பாய்களது அகாலமரணங்கள் தொடர்பாக 2008இறுதிக்காலப்பகுதியில்தான் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
தமது பிள்ளைகள் வடக்கே இடம்பெறும் யுத்தகாத்தில் எத்தகையவற்றிகளையும் பெறப்போவதில்லையென்பதை தெற்கேயிருக்கும் சாதாரண கிராமத்துசிங்களப்பெற்றோர்கள் உணரத்தொடங்கிவிட்டார்கள். பெரும்போர் நகரம் என வர்ணிக்கப்படும் கிளிநொச்சி நகரை கைப்பற்றுவதற்காக பலமுனைகளில் பெரும்போர் இடம்பெற்றிருக்கின்றது. இதில் குறிப்பாக2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் ,17ம் திகதிகளில் இடம்பெற்ற உக்கிரசமர் காரணமாக டிசம்பர் மாதம் 19 திகதி 400இற்கும் மேற்பட்ட சிங்கள சிப்பாய்களது உடலங்கள் பொரளை ஜெயரட்னம் மலர்ச் சாலைக்குவன்னியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விடயம் படிப்படியாக சிங்கள மக்களுடைய மனதில் வடக்குதப் போர்நிலைமை தொடர்பான உண்மையான படத்தை விரிவடையச் செய்திருக்கிறது. இந்தச் சண்டையானது17.1.2008இராணுவத் தளபதி தனது பிறந்தநாள் பரிசாக கிளிநொச்சியை வல் வளைப்புச் செய்து முற்று முழுதாக கைப்பற்றிவிடும்நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையில் மகிந்த அரசிற்கு ஏற்பட்டபேரிழப்பும் யாரொருவருடைய பிறந்ததிக்கொண்டாட்டாத்திற்காக தமது பிள்ளைகள் கொல்லப்படுகின்ற கொடூரமான இராணுவ ஏற்பாடுகளும் சிங்கள மக்கள்மத்தியில் சீற்றத்தைஏற்படுத்தியிருக்கின்றன. இந்த தினத்தை சண்டே ரைம்ஸ் பத்திரிகை கறுப்புச்செவ்வாய் (Black Tuesday)என வர்ணித்திருக்கின்றது. லக்பிம ஆங்கில ஏடு இதே தினைத்தை இரத்தம் தோய்ந்த செவ்வாய் (Bloody Tuesday) என வர்ணித்திருக்கின்றது. இந்த இரு பத்திரிகைகளும் கொழும்பிலி ருந்து வெளிவருகின்றவையாகும்
2008ம் ஆண்டு இலங்கைத்திதீவின் பொருளாதார நிலைமை யானது மிக மோசமான கட்டத்தை அடைந்தது. வாழ்க்கைச் செலவு உயர்வு, வாழ்க்கைத்தர வீழ்ச்சி, பங்குச் சந்தையின் வீழ்ச்சி. பணவீக்கம். பொருட்கள்விலையேற்றம் காரணமாக சாதாரண பொதுமக்களால் தமது அன்றாட சீவனோபாயத்தை கொண்டுநடத்தமுடியாது அல்லல்படும் அவலநிலைமை என்பன ஏற்பட்டன. தென்னிலங்கையில் சிங்கள பொதுமக்களுடைய நுகர்வுக்குரிய பொருட்களைப் பெற்றுக்கொள் வதில் ஏற்பட்ட இடர்பாடுகள் மகிந்த ராஜபக்சவினுடைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மையை படிப்படியாக வளர்க்கத்தொடங்கியுள்ளது.
உலக சந்தையில் மசகு எண்னை ஒருபீப்பாவின் விலை 144டொலராக அதிகரித்தபோது மகிந்தராஜபக்ச அரசாங்கம் எரிபொருளின்விலையை பெருமளவில் ஏற்றியது. ஆனால் அதன்விலை 2008 இறுதி க்காலப்பகுதியில் 44 அமெரிக்க டொலராக குறைந்தபோதும் எரிபொருள் விலையை அதுகுறைக்கமறுத்தது. இந்த மறுப்பிற்குக் காரணம் போருக்கானசெலவீனம் அதிகரித்திருப்பதாக மகிந்த அரசால் சுட்டிக் காட்டப்பட்டது. இறுதியில் உயர்நீதிமன்றம்தலையிட்டு பெற்றோலின்விற்பனை விலையாக100 ரூபாவை லீற்றர் ஒன்றிற்கு நிர்ணயம் செய்துள்ளது அதை அரசாங்கம் ஏற்கமறுக்கிறது. இங்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் சுயாதீன நீதித்துறைக்குமிடையில் முரண்பாடு எழுந்துள்ளது.
இதுஜனநாயக விழுமியங்களை தகர்த்தெறிந்து மகிந்த அரசு சர்வாதிகாரப்போக்கில் செல்வதற்கு முதல் காலடியை எடுத்துவைத்துவிட்டது. என்றேகணிப்பீடு செய்யப்படுகின்றது சட்டவாட்சி தத்துவம் புறக்கனிக்கப்பட்டு சட்ட தத்துவங்கள் உதாசீனப் படுத்தப்பட்டு உயர்நீதிமன்றம் ஒருவகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அவமானப் படுத்தப்பட்டுள்ளது. இதனுடைய எதிர் வினைகளை 2009 இல் நாம் நேரடியாக காணக் கூடியதாகவுள்ளது நன்றி வேர்கள் இணையம்
2008 ம் ஆண்டு சனவரி மாதம் தொடக்கம் ஒக்ரோபர் மாதம் வரை ஒவ்வொருமாதமும் அவசரகால சடடநீடிப்பின்போது இலங்கையின் பிரதமமந்திரி அவசரகாலச்சட்ட நீடிப்புக்கான காரணங்களை பாராளுநமன்றத்தில் எடுத்துச்சொல்லும்போது ஒவ்வொரு மாதமும் படையினருடைய உயிர் இழப்புகளையும் காயப்பட்ட படையினரின் எண்ணிக்கையும் சுட்டிக்காட்டி அவசரகாலச்சட்டத்தை நீடிக்க பாராளுமன்றம் அங்கீகாரம் தர வேண்டுமென்று கேட்பது ஒரு மரபாக இருந்துவருகிறது. ஆனால் ஒக்ரோபர் மாதக்கடைசியில் இனிமேல் படையினருடைய இழப்புக்களை வெளியிடுவதில்லை என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைய படையினரது இழப்புக்கள் இப்போதுவெளிவருவதில்லை. ஆனாலும்கூட- இராணுவ உயர்அதிகாரிகள் சிலர் எதிர்க்கட்சிகளோடு கொண்டிருக்கின்ற தொடர்புகள் காரணமாக வன்னியில் மரணிக்கும் சிங்களச்சிப்பாய்களது எண்ணிக்கை தென்னிலங்கை அரசியல் வாதிகளுக்கு எப்படியோ கிடைத்துவிடுகிறது. இதன்விளைவாக அவை கொஞ்சம் கொஞ்சமாக கசியத்தொடங்குகின்றபொழுது அவற்றை சில சுயாதீன ஊடகங்கள் வெளிப்படுத்திவிடுகின் மங்கள சமரவீராவின் டிபென்ஸ் வோக், கொழும்புப்பேஜ் போன்ற சுயாதீ இணையத்தளங்களும் சண்டே ரைம்ஸ், சண்டே லீடர் போன்ற அச்சு உடகங்களும் இவற்றை வெளிக்கொணர்ந்து இருக்கின்றன. கொழும்பில் இயங்கிவரும் இலத்திரனியல் ஊடகங்கள் தனியார் வானொலிகள் மீதான அளவுக்குமிஞ்சிஅழுத்தங்கள் காரணமாக அவை பெரும்பாலும் அடக்கிவாசிக்கின்றன. ஆனால் வன்னியில் இயங்கிவரும் சில ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை வைத்து சர்வதேச ஊடகங்கள் உண்மைத்தகவல்களை வெளிஉலகிற்கு துலாம்பரப்படுத்தி வந்திருக்கின்றன. இதனால் 2008ம் ஆண்டு மகிந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட ஊடகங்கள் மீதான மிகப்பெரிய அழுத்தங்கள் கொலை அச்சுறுத்தல்கள் என்பன அரசிற்கு பாதகமாகவே அமைந்தனை
சமாதானம் நோக்கிய அரசியல் நகர்வுகள்.
2008 இல் ஜனவரி மாதம் 2ம் திகதி இலங்கை அரசாங்கம் தாம் விடுதலைப்புலிகளுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தி லிருந்து விலகிக்கொள்வதாக ஒருதலைப்பட்சமாக ஒரு முடிவை அறிவித்தது. ஆனால் விடுதலைப்புலிகள் தமது அரசியல் துறைப்பொறுப்பாளர் ஊடாக சர்வதேச சமூகத்திற்கு விடுத்த அறிக்கையில் தாம் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதில்லை எனவும் அதனைத்தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதாகவும் மேலும் நோர்வேயின் சமாதான முயற்சிகளில் தாம் பூரணமான நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரித்தார் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இனிமேல் போர்நிறுத்தம் எதுவும் இல்லை )இணைய தட்டச்சு © :வேர்கள் இணையம்) என்றும் நோர்வேயின் சமாதான முயற்சிகள் கைவிடப்பட்டதாகவும் அறிவித்தார்கள் விடுதலைப்புலிகளின் இராஜதந்திர ரீதியிலான காய்நகர்த்தல் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான சொரூபத்தை சர்வதேசத்தின் முன்னால் வெளிச்சம்போட்டுக்காட்டியது. விடுதலைப்புலிகளோடு பேசுவதில்லை என்ற மகிந்த அரசின் முடிவு உள்ளூர் யதார்த்தத்தை புறந்தள்ளியது .
நோர்வேயின் சமாதான முயற்சிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்ற மகிந்த அரசின்முயற்சிசர்வதேசயதார்த்தத்தை ஒதுக்கித்தள்ளியது இலங்கையினுடைய இப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஒன்றுதான் ஒரே வழி என மகிந்த அரசு அறைகூவல் விடுத்தது. விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியையும் சம்பிக்கரவக்க அங்கம்வகிக்கும் பெருமளவு பௌத்தகுருமார்களை உறுப்பினர்களாகக்கொண்ட ஜாதிகஹல உறுமய போன்ற பேரினவாத கட்சிகளையும் திருப்திப்படுத்துவதன் மூலம் தனது அரசியல் இருப்பையும் ஆட்சி அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற மகிந்தராஜபக்ச கொம்பனியினது எதிர்பார்க்கைகள் 2008இறுதிக்காலத்தில் விடுதலைப் புலிகளுடைய தொடர்ச்சியான உறுதியான தற்காப்புத் தாக்குதல்கள் மூலம் தவிடுபொடியாகிப்போய்விட்டன. இதனால் மகிந்த அரசு தமதுஇராணுவத்தை விடுதலைப்புலிகள் தாக்கினால் தாம் விடுதலைப்புலிகளை தடைசெய்துவிடப்போவதாக அறிவித்துள்ளது
இத்தகைய தடைகள் கடந்த காலங்களிலும் ஜே.ஆர்.ஜெயவர்தாவின் அரசாலும் பிரேமதாசவின் அரசாலும் சந்திரிக்காவின் அரசாலும் போடப்பட்டன அவை எவையுமேவிடுதலைப்புலிகளினுடைய இலட்சிய வேட்கையினையோ இலக்குநோக்கிய பயணத்தையும் பாதித்துவிடவில்லை மாறாக தமிழர் தேசிய விடுதலைப்போராட்டம் கூர்மையடைந்து முனைப்படைந்து வீச்சுப்பெற்றது.
இதனால் விடுதலைப்புலிகள் இந்தத் தடைபற்றிய அறிவிப்பை கிஞ்சித்தேனும் கருத்தில் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் மகிந்தராஜபக்ச பேரினவாதிகளைச் சந்தித்துவிட்டு 2009ம் ஆண்டை தரைப் படைகளின் ஆண்டாகப் பிரகடனப் படுத்தியிருக்கின்றார். இதுவே அவர்2008 மார்கழி மாதம் 25ம் திகதி விடுத்த நத்தார் திச்செய்தியாகும். இந்த நத்தார்தினைத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது கடற்படை, விமானப்படை, பொலிஸ் சேவைகள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் தம்மை மகிந்தஅரசு அலட்சியப்படுத்திவிட்டதாக நன்றி வேர்கள் இணையம் கருதத்தொடங்கிவிட்டார்கள் இதன்விளைவுகள் 2009ம் ஆண்டில் மேலும் சிக்கலடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை 2009 ம் ஆண்டுவரவு செலவுத்திட்டத்தில் தரைப்படைக்கென எழுபது பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்தஆண்டு 2008 முப்பத்தாறு பில்லியன் ஒதுக்கப்பட்டது. இப்போது தரைப்படைக்கு இரண்டு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது அத்தோடு 2009ம் ஆண்டை தரைப்படையினரின் வெற்றிவிழா ஆண்டாக மகிந்த பிரகடனப்படுத்தியிருக்கின்றார். இது சாத்தியப்படுமா என்பது இன்றுபெரிதாக எழுந்துள்ள ஒரு கேள்விக்குறியாகும். எத்தகைய மாற்றங்களையும் படையினரால் கொண்டுவரமுடியாதென்பது களயதார்த்தமாக உள்ளது. இதேவேளையில் விடுதலைப்புலிகள் யுத்தத்தின்போக்கை தீர்மானிக்கும் சக்திகளாக பலம் பெற்று நிற்பதே களயதார்த்தமாகும்.