-
அதி சிறந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் பிளாக்பெரி நிறுவனம் விரைவில் புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந் நிறுவனம் இறுதியாக கடந்த ஜுலை மாதம் BlackBerry DTEK50 மற்றும் DTEK60 எனும் இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.
இக் கைப்பேசிகள் முற்றுமுழுதாக ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்டிருந்தன. அதாவது பௌதீகவியல் விசைப்பலகையினை கொண்டிருக்கவில்லை.
இந் நிலையில் QWERTY விசைப் பலகையினைக் கொண்ட புத்தம் புதிய கைப்பேசி ஒன்றினை வடிவமைக்கும் பணியில் அந் நிறுவனம் மும்முரமாக இறங்கியுள்ளது.
இந்த தகவலை பிளாக்பெரி நிறுவனத்தின் தலமை நிறைவேற்று அதிகாரியான ஜோன் சென் உறுதிப்படுத்தியுள்ளார்.
இக் கைப்பேசியானது 4.5 அங்குல அளவுடைய தொடுதிரையினையும், 2GHz Octa Core Snapdragon Processor, 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர 18 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்ளை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கப்படவிருப்பதுடன், Android 7.0 Nougat இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.