தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகவிட்டார் தனுஷ். இவர் பாடகர், பாடாலாசிரியர் என்று பல திறமைகளை திரைத்துறையில் நிருபித்துகாட்டியவர்.இதை எல்லாம் விட தனுஷ் நல்ல தயாரிப்பாளரும் கூட, இவரது தயாரிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.ஆனால், இவரது தயாரிப்பில் வெளிவராமல் இருக்கும் காக்கா முட்டை படம் ரிலிஸ்க்கு முன்பே பல விருது விழாவில் கலந்து கொண்டு கலக்கி வருகிறது.இந்நிலையில் தற்போது துபாய் இண்டர்நேஷ்னல் விருது விழாவில் அடுத்த மாதம் கலந்து கொள்ள இருக்கிறது.