உலக அழிவை தடுக்க விஞ்ஞானிகள் புது முயற்சி

266

புவியின் வெப்பநிலையை குறைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் விஞ்ஞானிகள் கலந்துரையாடி வருகின்றனர்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பினால் அண்டார்டிகா உள்ளிட்ட பனி பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டி உருகுவதால் கடல்மட்டம் உயரக் கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது. இதனால் கடலோர பகுதிகள் நீரில் மூழ்கக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுகிறது.

இவ்வாறு வெப்பநிலை அதிகரிப்பதற்கு ஓசோன் படை அழிவதே காரணம். புறஊதாக் கதிர்கள் புவியினுள்ளேயே மீண்டும் மீண்டும் தெறிப்படைவதனாலேயே புவி வெப்பமடைகிறது.

ஓசோன்படை தான் இவ்வளவு காலமாக புறவூதாக் கதிர்கள் உள்நுழைவதை தடுத்து வந்தது. தற்போது அவற்றின் தேய்வு அதிகரித்து விட்டதால் புறவூதாக் கதிர்கள் உள்நுழைகின்றன.

இதனால் புவி வெப்பமடைவதை தடுக்கவும் புவியின் வெப்பநிலையை குறைக்கவும் உலகெங்கிலும் உள்ள பல விஞ்ஞானிகள் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வின் பயனாக கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் புவியின் வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியும் என ஹார்வார்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் இதற்கு முன்பும் இந்த முறைமை கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் கூட இதனால் ஓசோன்படைக்கு பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை தற்போது இந்த முறையை பரிசோதித்துள்ள விஞ்ஞானிகள் இதனால் ஓசோன் படைக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கால்சைட் தூசுப்படலம் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காரணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

SHARE