ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பில், 132 நாடுகளின் அரசுகள் அங்கீகரித்துள்ள ஒரு பல்லுயிர் ஆய்வறிக்கை அண்மையில் பாரீசில் வெளியானது.
அதில் உலக உயிரினங்களில், 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவை அழியும் நிலையில் உள்ளன.
பல நாட்டு அரசுகள், சூழலியல் அமைப்புகள் நடத்திய, 15 ஆயிரம் ஆய்வுகளின் முடிவுகளை தொகுத்து உருவானது இந்த எச்சரிக்கை.
காடுகளை அழித்து விளை நிலமாக்குவது, பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் போடுவது, கடலில் போக்குவரத்து மற்றும் மீன் பிடிப்பு அதிகரிப்பது, புவி வெப்பமாதல் போன்ற பல மனித நடவடிக்கைகளை காரணங்களாக, இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
சூழியல் பாதுகாப்பு, காட்டுயிர்,கடலுயிர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அரசுகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாவிட்டால், பூமியின் பல்லுயிர்த் தன்மை இல்லாமல் போகும் என அந்த அறிக்கையில் சுட்டுக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.