உலக கோப்பை கால்பந்து: ஐவேரி கோஸ்ட்டிடம் ஜப்பான் தோல்வி

541

இன்று காலை 6.30 மணிக்கு நடந்த போட்டியில் ஐவேரிகோஸ்ட்– ஜப்பான் (‘சி’ பிரிவு) மோதின. 16–வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹோண்டா முதல் கோல் அடித்தார். அதன்பின் 64–வது நிமிடத்தில் ஐவேரி கோஸ்ட் அணி பதில் கோல் அடித்தது. வில்பிரைடு கோல் அடித்தார். அடுத்து 66–வது நிமிடத்தில் ஐவேரி கோஸ்ட் வீரர் ஜர்வின்ஹோ 2–வது கோலை அடித்தார்.

கடைசி வரை ஜப்பான் அணியால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் ஐவேரி கோஸ்ட் 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

SHARE