உலக கோப்பை கால்பந்து: போஸ்னியாவை வீழ்த்தியது நைஜீரியா

510
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நைஜீரியா-போஸ்னியா அணிகள் மோதின. மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்து நைஜீரியா வெற்றி பெற்றது.

இரு அணிகளும் முதல் பாதியில் விறுவிறுப்பாக ஆடின. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் நைஜீரியாவின் ஓடம்விங்கி அதிரடியான கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கினார். முதல் பாதியில் போஸ்னிய வீரர்கள் கட்டுப்பாட்டில் 55 சதவிகித நேரம் பந்து இருந்த போதும் அவர்களால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. இந்த சூழலில் முதல் பாதி ஆட்டம் முடிந்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றபோதும் அது கோலாக மாறவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களுக்கு பிறகு 1-0 என்ற கணக்கில் நைஜீரியா வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஓடம்விங்கி தேர்வு செய்யப்பட்டார்.

SHARE