உலக கோப்பை கால்பந்து: 1-1 என்ற சமநிலையில் ரஷ்யாவுடன் தென் கொரியா

506
பிரேசிலில் நடைபெற்று வரும் 2014- உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் இன்று ரஷ்யாவுடன் தென் கொரியா அணி மோதியது.

இடைவேளை வரை இரு அணியுமே கோல் எதுவும் எடுக்வில்லை. பின்னிறுதி ஆட்டத்தில் தென் கொரியா முதல் கோலை அடிக்க, அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தனது கணக்கில் ஒரு கோலை பதிவு செய்தது.

இரண்டாவது கோல் அடிக்கும் இலக்குடன் இரு அணிகளும் ஆவேசத்துடன் மோதின. அனுமதிக்கப்பட்ட ஆட்ட நேரமான 90 நிமிடங்களை கடந்து, உபரி நேரமாக மூன்று நிமிடங்கள் முடிவடைந்த நிலையிலும், வலையை நோக்கி நகர்த்தப்பட்ட எதிர் அணியின் பந்தை திசை திருப்புவதில் இரு அணிகளும் மும்முரம் காட்டியதால், மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காமல் 1-1 என்ற சமநிலையில் இந்த ஆட்டம்  முடிந்தது.

SHARE