உலக சாதனைப் படைத்த ரிலையன்ஸ் ஜியோ!

244

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜியோ சேவை உலக சாதனை புரிந்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் ஜியோ நிறுவனத்தால் 4ஜி இணைய சந்தையில் உலகளவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட மிகப்பெரிய வளர்ச்சியினை எட்டியுள்ளது.

இது குறித்து ஜியோ நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி கூறியதாவது, மக்கள் எங்களது நோக்கத்தைப் புரிந்து எங்களின் சேவையை பயன்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும், ஜியோ என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். இந்த ஜியோ சேவையானது பயனர்களுக்கு முதல் நான்கு மாதங்களுக்கு இலவச டேட்டா சேவைகளை வழங்கி பின் வழங்கும் டேட்டா சேவைகளுக்கான கட்டணங்கள் ரூ.19/- இல் துவங்கி அதிகளவு ரூ.4,999 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி (15 வருட காலம்)

வோடபோன் சுமார் 200 மில்லியன் பயனர்கள்

ஐடியா 177 மில்லியன் பயனர்கள் ஏர்செல் சுமார் 89.7 மில்லியன் பயனர்கள்

டெலிநார் 53.2 மில்லியன் பயனர்கள்

மற்றும் எம்டிஎன்எல் 3.6 மில்லியன் பயனர்களையும் கொண்டுள்ளது.

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் (3ஜி 4ஜி) சுமார் 35 மில்லியன் ஆகும். வோடபோன் மற்றும் ஐடியா சுமார் 25 மில்லியன் பிராட்பேண்ட் பயனர்களைக் கொண்டுள்ளன.

இவை ஆகஸ்டு இறுதி வரையிலான கணக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த நிறுவங்கள் 15 வருடக் காலத்தில் எட்டிய இலக்கை ஜியோ அக்டோபர் (35 மில்லியன் 4ஜி பயனர்கள்) இறுதிக்குள் எட்டும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பர்க்கின்றனர்.

மேலும், குறைந்த காலகட்டத்தில் ஜியோ சேவையானது 100 மில்லியன் பயனர்களை அடைய முயற்சிக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

SHARE