உலக செல்வந்தர்களில் 9வது நபர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச: சரத் பொன்சேகா

850

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உலகில் உள்ள செல்வந்தர்களில் 9வது நபர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க ஒதுக்கப்பட்ட பணத்தில் அதிகளவான பணம் ராஜபக்சவினரால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு நிதி ராஜபக்ஷவினரால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று இருப்பது மிலேச்சத்தனமாக அரசியல். நாட்டின் ஆட்சியாளர் உலகில் 9வது செல்வந்தர்.

கடந்த காலங்களில் அவர் எனது சிறந்த நண்பர், ஆனால் இன்று தேசப்பற்றாளர் என பொய்யான சிங்க தோலை போர்த்திக் கொண்டு மார்பில் அடித்து கொள்கிறார்.

நாட்டின் மீது அன்பில்லாமலேயே அவர் எப்போதும் செயற்பட்டு வந்தார். ஆட்சியாளர் வயிற்றுக்காக பிழைப்பு நடத்துபவர். அவருக்கு நாட்டின் மீது அக்கறையில்லை.

இவ்வாறானவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

 

SHARE