உலக செஸ் போட்டி: வெற்றி நெருக்கடியில் ஆனந்த்

365

நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே)– 5 முறை சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) மோதும் உலக செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது.

12 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் இதுவரை 8 ரவுண்டு முடிந்து விட்டது.

கார்ல்சென் 2 ஆட்டத்திலும், ஆனந்த் 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். 5 ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தன. கார்லசென் 4.5–3.5 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளார்.

நேற்றைய ஓய்வுக்கு பிறகு 9–வது சுற்று ஆட்டம் இன்று நடக்கிறது.

கார்ல்செனைவிட 1 புள்ளி பின்தங்கி இருக்கும் ஆனந்த் இந்த சுற்றில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆனந்த் கறுப்பு நிற கால்களுடன் விளையாடுவது மிகவும் சவாலானதே.

தோல்வி அடைந்தால் கார்ல்சென் உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்வதை ஆனந்த் தடுக்க இயலாது. இதனால் வெற்றி பெற முடியாவிட்டாலும் ‘டிரா’ செய்யும் வகையில் விளையாடுவது அவசியம்.

வெள்ளை நிற காய்களுடன் அடுத்த சுற்றில் விளையாடும் போது வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும்

SHARE