உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வு இன்று சுதந்திர சதுர்க்கத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
இதில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன நிவாரண பொருட்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளித்தார்.
மேலும் பல இலட்சம் ரூபா பெருமதியான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் உற்பட 22 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.