ஐ.எஸ். அமைப்பை உளவு பார்த்த மூன்று பேரை கழுத்தறுத்து கொல்வது போன்ற வீடியோவை வெளியிட்டு தீவிரவாதிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவை கைப்பற்றி ஆட்சி செய்து வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தி அதற்கு தகுந்தார் போல் தண்டனை வழங்கி வருகின்றனர்.
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கல்லால் அடித்து கொலை செய்தல், கட்டிடத்தில் இருந்து தள்ளி விடுத்தல், கழுத்தறுத்து கொலை செய்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தங்களை உளவு பார்த்ததாக கூறி 3 பேரை ஐ.எஸ். அமைப்பினர் கழுத்தறுத்து கொல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவின் தொடக்கத்தில் குற்றவாளிகளுக்கு ஐ.எஸ். அமைப்பினர் வழங்கும் தண்டனைகள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பின்னர். குதிரையில் அமர்ந்திருக்கும் தீவிரவாதிகள் 3 குற்றவாளிகளை சங்கிலியால் கட்டி இழுத்து வருகின்றனர். பின்னர் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக நடைபெற்ற வான்வழி தாக்குதலுக்கு உதவிய இவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது என்று கூறுகின்றனர். சிறிது நேரம் கழித்து மூன்று பேரையும் கழுத்து அறுத்து கொலை செய்வது போன்று வீடியோ முடிவுபெறுகிறது. உயர்தர கமெராவில் நேர்த்திய இந்த வீடியோவை தீவிரவாதிகள் எடுத்துள்ளனர். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
|