உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு 40 இடங்கள் கிடைக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்

669
உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு 40 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்ணிப்பில் தெரிய வந்துள்ளது.

இது வரை அம்மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் 33 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. அந்த 33 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்புக்கு அதிக இடமுள்ளது என தனியார் தொலைக்காட்சி ஒன்று சில தினங்களுக்கு முன் கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளது.  அதில் பா.ஜ.க.வுக்கு 23 இடங்களும், காங்கிரசுக்கு ஓரிடமும், பகுஜன் சமாஜுக்கு 3 இடங்களும், சமாஜ்வாதிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

கடந்த தேர்தலில் இந்த 33 தொகுதிகளில் 4 தொகுதியில் மட்டும் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. தற்போது அக்கட்சிக்கு கூடுதலாக 19 தொகுதிகள் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்த நிலையில் தற்போது ஓரிடம் தான் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.

ஆக மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு 40 தொகுதிகளும், காங்கிரசுக்கு 4 இடங்களும், பகுஜன் சமாஜுக்கு 19 இடங்களும், சமாஜ்வாதிக்கு 24 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைக்கும் பட்சத்தில் அக்கட்சி ஒரு சில கூட்டணி கட்சிகள் உதவியுடன் மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE