வவுனியா மாவட்ட ஊடகவியலாளரும் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபிலநாத்துக்கு நேற்று (2.8.14) இரவு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொர்பாக வவுனியா பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஊடகவியலாளரான நவரத்தினம் கபிலநாத்துக்கு இரவு இரு தொலைபேசி இலக்கங்களில் இருந்து இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் இதன் போது குறித்த ஊடகவியலாளர் தான் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்வதாக தெரிவித்த போது, தம்மை யார் என தெரியாது பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு இருப்பதற்கு விருப்பமில்லையா என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஊடகவியலாளர் வவுனியாவை சேர்ந்த ஏனைய இரு ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
ஊடகவியாளர் கபில்நாத்திற்கு கொலை மிரட்டல் தொடர்பாக தமது கண்டனத்தை தெரிவித்து கொள்வதோடு
ஊடகங்களையோ ஊடகவியளாலர்களையோ அடக்குவதன் ஊடாக அரசு வெற்றி காணலாம்
என நினைக்கிறது. சந்திரிக்கா அரசு ஊடகவியாளர்களை அடக்க முற்பட்டதன் விளைவு
அவர் பரம்பரை ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டாரகள் என்பதை இவ்விடத்தில்
சுட்டிக்காட்டுகிறோம்.
TPN NEWS