ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

443

இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தியை நோக்காக கொண்டு இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 இளைஞர் கழகங்களை தெரிவுசெய்யும் வகையிலான நேர்முகத்தேர்வுகள் இன்று காலை முதல் மட்டக்களப்பில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைமையகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த நேர்முக தேர்வில் கலந்துகொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)

நாளை வரை நடைபெறவுள்ள இந்த நேர்முகத்தேர்வில் 60க்கும் மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் நைரூஸ் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (7)

இதேவேளை, இளைஞர்கழகம் ஊடாக அவர்களின் பிரதேசங்களில் அபிவிருத்தி மேற்கொள்ளும் வகையில் கழகம் ஒவ்வொன்றுக்கும் 75ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE