ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் இதுவரையில் கைது

469

ஊரடங்குச் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE