ஊரையே திரும்பி பார்க்க வைத்த தளபதி போஸ்டர்!

325

விஜய்யிடம் இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், நடிகர் என பன்முகம் கொண்ட அருண்ராஜா காமராஜ் கதை சொல்லியிருக்கிறார் அண்மையில் ரசிகர்களை குஷிப்படுத்திய செய்தி. விஜய் 63 படத்தில் நடித்து வரும் அவர் அக்கதையை ஓகே செய்துவிட்டால் அது அவரின் 65 வது படமாக அமையும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

அட்லீ இயக்கத்தில் தற்போது விஜய் 63 படம் துரிதமாக தயாராகி வருகிறது. விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22 ல் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதே வேளையில் மிரட்டலான வசனங்கள் கொண்ட போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஒட்டன்சத்திரத்தில் ரசிகர்கள் வைத்துள்ள போஸ்டர் பலரையும் கவர்ந்துள்ளது. விஜய்க்கு ஃபேன்ஸ் கூட்டம் பல இடங்களில் பரவலாக இருப்பதை காணமுடிகிறது.

SHARE