எகிறி மேலே உட்காரும் காட்சி!! ஷூட்டிங்கில் நடிகரிடம் பிக்பாஸ் நடிகை பூர்ணிமா செய்த செயல்..

58

 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் 14 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடந்து முடிந்தது. விஜே அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டதை அடுத்து போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்துடனும் அடுத்த வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் பலரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா ரவி, பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் அவர் நடித்த செவப்பி படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே இப்படத்தில் நடித்திருந்ததை அடுத்து பல பேட்டிகளில் கலந்து கொண்டு செவப்பி படத்தினை பிரமோட் செய்து வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பிக்பாஸ் முடிந்ததும் மூவி வந்துவிட்டது அதற்கான பிரமோஷனுக்கு வந்துவிட்டதாக எனக்கு வேறு ஐடியா இல்லை, அதை பொறுத்து தான், இந்த படம் எப்படி வந்திருக்கு, நான் எப்படி நடித்து இருக்கிறேன் என்பதை பொறுத்து தான் இந்த படம் நகரும்.

ஒரு காட்சியில் நடிகர் மீது எகிறி பின்னால் உட்கார வேண்டும். நானும் எகிறி அவர் மேல் உட்கார்ந்துவிட்டேன். ஷார்ட் முடித்ததும் நன்றாக இருந்தது. அதன்பின் என் மீது இயக்குனரிடம் அவர் கம்ப்ளைண்ட் பண்ணாரு, என்னங்க உண்மையாகவே அப்படி பண்றாங்க என்று கூறினார். நானும் சாரி சொல்லிவிட்டேன் என்று பூர்ணிமா ரவி பகிர்ந்துள்ளார்.

SHARE