முகத்தின் அழகை பிரதிபலிக்கும் உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள அனைவரும் அதிகமாக விரும்புவர்.இதில் ஆண்கள், பெண்கள் என்று வித்தியாசம் இல்லை. அவர்களின் எண்ணங்கள் பொதுவாக உதடு மென்மையாகவும், குறிப்பாக சிவப்பாக இருக்க வேண்டும் என்பது தான்.இதற்கு தமது உதடுகளை முறையாக பரமாரித்து வந்தாலே போதுமானது.உதடுகளை அழகாக வைக்க டிப்ஸ்:-1) மழை மற்றும் குளிர் காலங்களில் உதடுகளில் வெடிப்பு ஏற்படாதவாறு உதடுகளில், ‘வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.
2) வெயில் காலத்தில் வைட்டமின், ‘இ’ சத்துகள் நிறைந்த, ‘சன்ஸ்கிரீன் லோஷன்’ போன்றவற்றை பயன்படுத்தலாம். 3) தரமான லிப்ஸ் ஸ்டிக்கை பயன்படுத்தலாம். தரமற்ற மற்றும் தவறான முறையில் பயன்படுத்தப்படும் லிப்ஸ் ஸ்டிக்கால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரிய வாய்ப்புள்ளது. 4) உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தும் பழக்கம் பலருக்கு இருக்கும். அவ்வாறு செய்யும் போது உதட்டில் உள்ள ஈரப்பதம் குறைவதுடன், உதட்டில் புண்கள் ஏற்படலாம். |