எதிரிகளின் இலக்கை குறிவைத்து தாக்கும் பிரித்வி -2 ஏவுகணை: வெற்றிகரமான சோதனை

281

எதிரிகளின் இலக்கை அணு ஆயுதம் தாங்கி சென்று இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட சூப்பர்சோனிக் பிரித்வி -2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி பரிசோதித்தது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை என்ற சிறப்பு உண்டு.

ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டடதாக இந்திய ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1000கிலோஎடை கொண்டது. அணு ஆயுதத்தை சுமந்துசென்று 350 கி.மீ., வரையிலான தொலை தூரத்தில் இருக்கும் இலக்கை குறி வைத்து தாக்கும் சக்தி வாய்ந்தது .

SHARE