மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து சாதனங்களுக்கும் குறித்த ஒரு ஆயுட்காலம் காணப்படுகின்றது.எனினும் தனது புதிய தொழில்நுட்பங்கள் மூலம் அவ் ஆயுட்காலங்களை அதிகரிப்பதற்கு மனிதன் ஒருபோதும் பின்னடித்ததே இல்லை.
அதேபோன்று தான் இப்போது வாகன டயர்களிலும் புதிய தொழில்நுட்பம் புகுத்தப்படவுள்ளது. Eagle–360 எனும் கோள வடிவில் அமைந்த டயரே அதுவாகும். இந்த டயர்களை Goodyear நிறுவனம் வடிவமைத்து அறிமுகம் செய்யவுள்ளது. இதில் காணப்படும் சென்சாரின் ஊடாக பாதையினை கண்காணித்து கால நிலைக்கு ஏற்பட வாகனம் பயணிக்கக்கூடிய வசதியை தருதல் சிறப்பம்சமாகும். |