எதிர்நீச்சல் சீரியல் புகழ் சக்திக்கு காதலர் தினத்தில் நடந்த ஸ்பெஷல் விஷயம்- அவரது மனைவி போட்ட பதிவு

81

 

கோலங்கள் சீரியலுக்கு பிறகு திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் மிகவும் தரமான கதைக்களத்தில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் எதிர்நீச்சல்.

சன் தொலைக்காட்சியில் 9.30க்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் இப்போது 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

குணசேகரன் மகள் தர்ஷினி காணவில்லை, அதற்கு காரணம் ஈஸ்வரி தான் என போலீஸில் புகார் அளிக்க இப்போது அவர் பெரிய பிரச்சனையில் உள்ளார்.

இன்னொரு பக்கம் குணசேகரன் தனி இனி நாங்கள் தனி என சக்தி, ஞானம், கதிர் 3 பேரும் ஒன்றாக நிற்கிறார்கள். அடுத்தடுத்து கதைக்களத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

நடிகரின் மனைவி
எதிர்நீச்சல் தொடரில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் சபரி பிரசாத். இவரது மனைவி பிப்ரவரி 14ம் தேதி இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், நாங்கள் காதலிக்கும் போது காதலர் தினம் கொண்டாடியது இல்லை, காரணம் ஒருவேளை நாங்கள் காதலர் தின நாளில் கல்யாணம் பண்ணிக் கொண்டதாலோ என்னவோ காதலர் தினத்தை கொண்டாடவில்லை என நினைக்கிறேன் எனறிருக்கிறார்.

அதோடு எங்களுடைய 2வது கல்யாண நாள் என்று குறிப்பிட பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

SHARE