சன் டிவியில் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது எதிர்நீச்சல். டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 3ல் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது.
ஆணாதிக்கத்தால் ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி தான் இந்த சீரியல் கதை இருந்து வருகிறது.
ஸ்கிரிப்ட் எழுதியது இவரா
எதிர்நீச்சல் சீரியலின் ஸ்கிரிப்ட் எழுதியது ஒரு பிரபல சீரியல் நடிகை தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து இருக்கும் நடிகை ஶ்ரீ வித்யா தான் எதிர்நீச்சல் கதையை எழுதி இருக்கிறார்.
ஜில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஶ்ரீ வித்யா இதுவரை ஐந்து சீரியல்களுக்கு கதை எழுதி இருக்கிறாராம்.