எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

358

 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Namal_0

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நாமல் ராஜபக்ச வேட்பு மனு கோரல் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய இதுவரை முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிடுவதா அல்லது வேறு கட்சியில் போட்டியிடுவதா என்று குறிப்பிடப்படாத நிலையில், நாமல் ராஜபக்ச இவ்வாறு வேட்பு மனு கோரல் தாக்கல் செய்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் நாமல் ராஜபக்ச தனது தந்தையை கைவிட்டுள்ளதாக பல ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை, இன்று காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நாமல் ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் அரசியலை தெரிவு செய்யும் போது பல்வேறு கட்சிகள் மற்றும் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுபவம் கொண்ட அரசியல் தற்போது காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடு பூராகவும் மகிந்தவை பிரதமராக்கும் மக்கள் பேரணிகளில் நாமல் ராஜபக்சவின் ஆதரவு கிடைக்காமை தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,

இது குறித்து தனக்கு எவ்வித சிக்கல்களும் இல்லை எனவும் எதிர்வரும் 12ஆம் திகதி மாத்தரையில் இடம்பெறுகின்ற பேரணியில் கலந்துக்கொள்வது தொடர்பில் உறுதியாக குறிப்பிட முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் தன்னை குற்ற புலனாய்வு பிரிவிற்கு வருவமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதனாலே உறுதியாக குறிப்பிட முடியாதென சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE