அன்றாட வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் உலோகங்கள் உட்பட ஏனைய பதார்த்தங்களை ஒட்டி இணைக்கும் அவசியம் காணப்படுகின்றது.
இதற்காக சில ஒட்டும் பசைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எனினும் அவற்றால் ஒரே வகையான பாதார்த்தங்களையே ஒட்டி இணைக்கக்கூடியதாக இருக்கின்றது.
இந் நிலையில் ஜேர்மனின் ஹீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெவ்வேறு பதார்த்தங்களையும் ஒட்டக்கூடிய புதிய முறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.
இதற்காக விசேட எல்க்ட்ரோ கெமிக்கல் பதார்த்தத்தினை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் வெவ்வேறு வகையான உலோகங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்க முடியும், அத்துடன் ஒரு உலோகத்துடன் உலோகம் அல்லாத பிறிதொரு பதார்த்தத்தையும் இணைக்க முடியும்.
குறித்த எலக்ட்ரோ கெமிக்கலில் நனோ துணிக்கைகள் காணப்படுவதனால் மிகவும் வலிமையாக ஒட்ட முடிவதோடு, ஒட்டப்பட்ட பதார்த்தங்களை இலகுவில் பிரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.