எந்த திருமணத்திலும் ரஜினி இப்படி செய்தது இல்லை! கொடுத்து வச்சவங்க ஷங்கர் மகள்

112

 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, தருண் கார்த்திகேயனுடன் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முதல் ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.

மேலும் திரையுலகை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், நயன்தாரா, சூர்யா, அட்லீ, ரன்வீர் சிங், மோகன்லால், சிரஞ்சீவி என பலரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

ரஜினிகாந்த் செய்த விஷயம்
நடிகர் ரஜினிகாந்த் எந்த திருமணத்திற்கு சென்றாலும், மணமக்களை வாழ்த்திவிட்டு கிளம்பிவிடுவாராம். ஆனால், ஷங்கரின் மகள் திருமணத்தில் மட்டும் அப்படி செய்யவில்லையாம். ஐஸ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயன் தம்பதியை வாழ்த்திவிட்டு, ஷங்கர் வீடு திருமணத்தில் உணவு சாப்பிட்டு தான் கிளம்பினாராம் ரஜினிகாந்த்.

இதுவரை எந்த திருமணத்திலும் சாப்பிடாத ரஜினிகாந்தை கெஞ்சி சாப்பிட வைத்தது இயக்குனர் ஷங்கர் என கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கருக்கு பொதுவாக ஒரு பழக்கம் இருக்கிறதாம்.

யாருடைய திருமணத்திற்கு சென்றாலும், சாப்பிட்டுவிட்டு தான் கிளம்புவாராம். இது அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்பதனால் இதை தவறமாட்டாராம். அதனால் தான் ரஜினி கண்டிப்பாக தன்னுடைய வீட்டு திருமணத்தில் சாப்பிட வேண்டும் என முடிவு செய்துள்ளார். மேலும் இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE