புஷ்பா புருஷன், சூரியையும், புஷ்பாவாக நடித்த ரேஷ்மாவையும் யாராலும் மறக்க முடியாது.
விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது. அப்படத்தின் மூலம் ரீச் ஆன நடிகை ரேஷ்மா விலங்கு வெப் தொடரில் விமலுடன் இணைந்து நடித்திருந்தார்.
தொடர்ந்து சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் பிஸியாக இருக்கிறார். சீரியல்கள் என்றால் பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் என இரண்டு சீரியல்களில் நடித்து வருகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் அவ்வப்போது வில்லி எட்டிப் பார்த்தாலும் அவரது கதாபாத்திரம் சில சமயங்களில் நல்ல விதமாகவே கொண்டு செல்லப்படுகிறது.
ரேஷ்மா ஓபன் டாக்
அண்மையில் ஒரு பேட்டியில் ரேஷ்மா பேசுமபோது, எனக்கு பாக்கியலட்சுமி சீரியலில் மற்ற நடிகர்களுடன் காம்பினேஷன் காட்சிகள் மிகவும் குறைவாகவே இருக்கும் ஆனால் யூனிட் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
கோபி குறிப்பாக ஒளிப்பதிவாளர் முத்து மிகவும் கலகலப்பாக இருப்பார். நான் எப்போதும் அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவள் கிடையாது, அமைதியாக எல்லாம் இருக்க முடியாது. நான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்ள ஏதாவது செய்வேன் என பேசியுள்ளார்.