“என்னுடைய ஒரேயொரு அரசியலானது  இறைவன் மற்றும்   நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதாகும்” – கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

202

என்மீது  அரசியல் பொறுப்புக்களை  சுமத்துவது தகுதியாக இருக்கும் என்று  சிலர் முன் வைக்கும் கருத்துக்கள் என்னை ஆச்சரியப்படுத்துவதுடன் கவலையையும் ஏற்படுத்தியிக்கின்றது. என்னுடைய ஒரேயொரு அரசியலானது  இறைவன் மற்றும்   நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதாகும்.  அதற்காக  அரசியல் கோட்பாடுகளை அதனூடாக முன்னிறுத்துவதோ எந்தவொரு கட்சிக்கு ஆதரவு வழங்குவதோ அரசியல் பதவிக்காக முன்வருவதோ எந்தவகையிலும் எனது நோக்கமல்ல என்பதை அறிவிக்க விரும்புகிறேன் என்று  கத்தோலிக்க திருச்சபையின்  கொழும்பு பேராயர்  கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில்  கொழும்பு பேராயரின்  ஊடக மற்றும் கலாசார நிலையம்  விடுத்துள்ள  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்த நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினால்  என்மீது  அரசியல் பொறுப்புக்களை  சுமத்துவது தகுதியாக இருக்கும் என்று  சிலர் முன்வைக்கும் கருத்துக்கள் என்னை ஆச்சரியப்படுத்துவதுடன்   கவலையையும் ஏற்படுத்தியிக்கின்றது.   நான்  கத்தோலிக்க  திருச்சபையின் ஒரு  பாதிரியார் மற்றும் ஆண்டகையாக  எனது  ஆன்மிக மற்றும்  மத நடவடிக்கைகளை மட்டும்  முன்னெடுத்து வருகின்றேன்.

நான் இந்த நாட்டையும்  மக்களையும்   எமது கலாசாரத்தையும் மிக அதிகமாக   நேசிக்கின்றேன்.  இவற்றைப் பாதுகாப்பதற்காக  ஆன்மிக ரீதியாக என்னால் செய்ய முடியுமாக  ஏதாவது இருப்பின் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேனேதவிர  வேறு எந்த  எதிர்பார்ப்புக்களும் இல்லை என்பதை உறுதிப்பட கூறுகின்றேன்.

என்னுடைய ஒரேயொரு அரசியலானது  இறைவன் மற்றும்   நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதாகும்.   அதற்காக  அரசியல் கோட்பாடுகளை அதனூடாக முன்னிறுத்துவதோ எந்தவொரு கட்சிக்கு ஆதரவு வழங்குவதோ அரசியல் பதவிக்காக முன்வருவதோ எந்தவகையிலும் எனது நோக்கமல்ல என்பதை   அறிவிக்க விரும்புகிறேன்.   என்மீது நம்பிக்கை வைத்து சில தரப்பினர்  முன்வைத்த  கருத்துக்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன் அது அந்த இடத்திலேயே நின்று விடும் என்று எதிர்பார்க்கின்றேன்.

SHARE