என்னை ஏமாற்றி விட்டார் இயக்குநர் ஆதிக்… நடிகை ஆனந்தி காட்டம்

301

கண்ணியமான என கதாபாத்திரத்தை கெடுத்துவிட்டார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்று ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடித்த ஆனந்தி குற்றம் சாட்டியுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னிடம் சொன்ன கதையை படமாக்கவில்லை என்றும் ஆனந்தி புகார் கூறியுள்ளது பரபரப்பை எற்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். ஜெயகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இரட்டை அர்த்த வசனங்கள் தூக்கலாக இருப்பதால் படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. திரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருந்தாலும், பெண்கள் பலரும் படத்தின் இரட்டை அர்த்த வசனங்களுக்கும், காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

SHARE