இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கான இசையை தாமதமாக கொடுக்கிறார் என்ற பேச்சு திரை வட்டாரத்தில் இருக்கிறது. அப்படி தான் ஒரு முறை பிரபல இயக்குனர் சுபாஷ் கய் என்பவருக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் இயக்குனர் சுபாஷ் கய் இருவரும் இணைந்து பணியாற்றிய திரைப்படம் தான் யுவராஜ். இப்படத்திற்காக இசையை கொடுப்பதில் மிகவும் தாமதம் செய்துள்ளாராம் ரஹ்மான்.
அந்த சமயத்தில் ‘ ரஹ்மான் எப்படி தாமதிக்கலாம், என்னுடைய கால்ஷீட் உள்ளது. அதே போல் படத்தின் ஹீரோ சல்மான் கானின் கால்ஷீட் இருக்கிறது. நீங்கள் பாடல்களை இதுவரை கொடுக்கவில்லை என ரஹ்மானுக்கு கடிதம் ஒன்றை எழுதினாராம்.
இதற்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான், ‘நான் தற்போது லண்டனில் இருக்கிறேன். சென்னை செல்லும் வழியில் மும்பைக்கு வருவேன், அங்கு சுக்விந்தர் சிங் ஸ்டூடியோவில் நாம் இருவரும் சந்திக்கலாம். அங்கே உங்களாக பாடல்களை உருவாக்குவேன்’ என கூறியுள்ளார்.
இயக்குனருடன் மோதல்
அந்த ஸ்டுடியோவில் இருந்த சுக்விந்தர் சில இசைகளை உருவாக்கி கொண்டிருந்ததாராம். அப்போது இயக்குனர் சுபாஷ் கய், சுக்விந்தர் சிங்கிடம் என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். ரஹ்மான் தண்னிடம் ஒரு பாடலை உருவாக்க சொன்னதாக சுக்விந்தர் சிங் கூறினாராம்.
இதனால் இயக்குனர் சுபாஷ் கய் மிகவும் கோபமடைந்துள்ளார். ரஹ்மானிடம் கோபத்தில் கத்தியுள்ளார். “என்னுடைய படத்திற்கு இசையமைக்க நான் உங்களை தான் பல கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன். சுக்விந்தரை வைத்து எதற்காக இசை உருவாக்குறீர்கள். அதை என் முன் கூற உங்களுக்கு தைரியம் இருக்கிறதா. எனக்கு சுக்விந்தர் சிங் தான் வேண்டும் என்றால், நான் அவரை ஒப்பந்தம் செய்கிறேன், என் பணத்தை எடுத்துக்கொண்டு சுக்விந்தரை என் படத்திற்கு இசையமைக்க வைக்க நீங்கள் யார்” என சத்தம்போட்டுள்ளார்.
அப்போது ரஹ்மான் “என் பெயருக்காக தான் பணம் கொடுக்கிறீர்கள். என் இசை அல்ல” என கூறிவிட்டாராம். இறுதியில் அந்த பாடலை யுவராஜ் படத்திற்கு பதிலாக Slumdog Millionaire படத்திற்காக பயன்படுத்தியுள்ளார். அந்த பாடல் தான் ஆஸ்கர் விருதை வென்ற “ஜெய் ஹோ”. இந்த த