‘எபோலா’ எனும் உயிர்க்கொல்லி நோயை குணப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே நோய் தாக்காமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் உலகம் முழுவதும் இந்த நோய் அதி தீவிரமாக பரவி ஏராளமானவர்களை பலி வாங்கி வருகிறது. இதற்கிடையே பல முன்னணி நிறுவனங்கள் இந்த நோய்க்கு மருந்து தயாரித்துள்ளன. ஆனால் அவற்றை இன்னும் பரிசோதித்து பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளிக்கவில்லை.
இருந்தாலும் நோயின் கடுமை கருதி எபோலா நோய்க்கு பரிசோதனை செய்யாத மருந்துகளை சர்வதேச நாடுகள் பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.