எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும் – வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவிப்பு

492
நெடுங்கேணி பிரதேச கிராம மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகளை வழங்கி உரையாற்றும் போதே “எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும்” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.
வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த பட்டிக்குடியிருப்பு, துவரங்குளம், கற்குளம், மாமடு, முத்துமாரி நகர், கனகராயன்குளம், புத்தூர்சந்தி, மன்னகுளம், கொல்லர் புளியங்குளம், அனந்த புளியங்குளம், ஆகிய கிராம மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகளை செயற்படுத்தினார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்.
மேற்படி நிகழ்வு நெடுங்கேணி நகர மத்தியில் நானூறுக்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை 05.10.2014 அன்று இடம் பெற்றது குறிப்பிடப்பட்டது. இதில் 16 பயனாளிகளுக்கு ரூபா. 7500.00 பெறுமதியான ஒருமாத வளர்ச்சியடைந்த கோழிக்குஞ்சுகளும், 20 பயனாளிகளுக்கு 3 புசல் விதை நெல்லும், 75 வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரண தொகுதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் வவுனியா வடக்கு பிரஜைகள் குழுத் தலைவர் க.தேவராசா, நெடுங்கேணி பிரதேச வர்த்தக சங்கதலைவர் பொ.தேவராசா, வவுனியா தெற்கு கிராம சேவையாளர் தெய்வேந்திரம்பிள்ளை உட்பட கிராமிய அபிவிருத்தி அமைப்பு தலைவர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள், வன்னி குறோஸ் சுகாதார நிறுவன கிராமிய மட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பெருந்தொகையான மக்களும் கலந்து கொண்டனர்

unnamed (5)
  unnamed (1)
unnamed (4)

unnamed (1)
unnamed (4)
TPN NEWS
SHARE