எம்.பி.வேலுகுமார் மீது தாக்குதல் முயற்சி

106

 

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க இ.தொ.க உப தலைவர் செல்லமுத்துவின் அடியாட்கள் தாக்க முயற்சித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று (21) காலை நடைப்பெற்றது.

அந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரும் கலந்துகொண்டிருந்தார்.

அந்நிகழ்வின் பின்னர் தனது அடுத்த நிகழ்விற்காக சென்றிருந்த வேலுகுமாரை இ.தொ.க.வின் உப தலைவர் செல்லமுத்து உட்பட அவரது அடியாட்கள் குழுவொன்று தாக்க முயற்சித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை தொடர்பான இ.தொ.க.வின் இரட்டை முகத்தை தொடர்ச்சியாக வேலுகுமார் விமர்சித்து வந்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

உண்மையை சொல்வதை தாங்கிக்கொள்ள முடியாமலே இவ்வாறான அநாகரீக செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் என மக்கள் கடும் எதிர்ப்பை அவர்களுக்கு தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினரை தாக்க முயற்சித்த செல்லமுத்துவின் அடியாட்கள் மக்களின் கடும் எதிர்ப்பினால் பின்வாங்கி சென்றதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE