உயிரைக் கொல்லும் கொடிய நோயான எயிட்ஸினை குணப்படுத்துதல் அல்லது தடுப்பதற்கான முயற்சிகளில் விஞ்ஞானிகள் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பத்தில் ஒரு சிறுவர்களிடம் எயிட்ஸ் நோயுடன் போராடக்கூடிய நோயெதிர்ப்பு சக்தி இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த ஆய்வினை Science Translational Medicine எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதன் ஊடாக இரண்டரை வருடங்களில் HIV தொற்றினை ஏற்படுத்தும் வைரஸ்களை 60 சதவீதம் அழிக்க முடியும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
HIV தொற்றானது மனித நிர்ப்பீடனத் தொகுதியினையே குறிவைத்து தாக்குகின்றது.
எனினும் HIV நோயெதிர்ப்பு சக்தி கொண்ட சிறுவர்களில் இச் செயற்பாட்டிற்கான சாத்தியங்கள் குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆய்விற்காக தென்னாபிரிக்காவை சேர்ந்த HIV தொற்றுடைய 170 சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.