எரிக் சொல்ஹெய்மின் சாட்சியத்தை சர்வதேச நிறுவனம் ஏற்றுக்கொள்ளுமா?

447

அன்று இலங்கையின் இறையாண்மையை சர்வதேசத்துக்கு காட்டித்கொடுத்து தேசத்துரோகச் செயல்களில் ஈடுபட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது சிஹல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் அவரை கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என சிஹல உறுமய தெரிவித்துள்ளது. நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொஹேய் உடனான ரணிலின் சந்தி;ப்பும் இலங்கைக்கு எதிரானது என அந்தகட்சி குற்றம் சுமத்தியுள்ளது. எரிக் சொல்ஹெய்மும் ரணிலும்இ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை பேணிக்கொண்டதுடன்இ அவர்களுக்கு சார்பான ஊடகங்களில் அறிக்கைகளை வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

எரிக் சொல்ஹெய்மின் 1

அதுமாத்திரமின்றி போர்நிறுத்த உடன்படிக்கையின் ஊடாக மன்னிக்க முடியாத செயலை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மேற்கொண்டிருந்ததாகவும் எல்லாவல மேதானந்த தேரர் குற்றம் சுமத்தினார். இதேவேளை கடந்த 2008 தொடக்கும் 2010 வரை ஐக்கிய நாடுகளின் அமர்வுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எரிக் சொல்ஹெய்ம்மை சந்தித்தமையும் அவரை இலங்கை வருமாறு அழைத்தமை தொடர்பிலும் எல்லாவெல மேதானநந்த தேரர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தான் இன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சிய மளிக்கவுள்ள தாக நோர்வேயின் முன்னாள் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறிய கருத்து நகைப்பிற்குரியது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சொல்ஹெய்ம் போர்க் குற்றம் தொடர்பில் எந்தவொரு சர்வதேச நீதிமன்றிலோ அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தயார் என அண்மையில் ஆங்கில வார இதழுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.

எரிக் சொல்ஹெய்மின் 4

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிக்கும் தகுதி கிடையாது எரிக் சொல் ஹெய்மிற்கு இல்லையெனவும் அவரது கருத்து நகைப்பிற்குரியது எனவும் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது சொல்ஹெய்ம் இலங்கை விவகாரங்களில் எந்த வகையிலும் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி சொல்ஹெய்மிற்கு எதுவும் தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் எவ்வாறு தோல்வியடைந்தது என்பது பற்றி மட்டுமே சொல்ஹெய்ம் விபரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எரிக் சொல்ஹெய்மின் சாட்சியத்தை சர்வதேச நிறுவனம் ஏற்றுக் கொண்டால் அதன் மூலமே சர்வதேச விசாரணைகள் தவறானது என்பது புலனாகும் என்றும் கடும் விசனம் எழுந்துள்ளது.

இலங்கை விவகாரங்கள் தொடர்பில் தான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும்படி நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், அந்நாட்டின் சார்பில் இலங்கைக்கான சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தவருமான எரிக் சொல்ஹெய்மை அமெரிக்கா கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலை அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் வோஷிங்டனில் அண்மையில் இடம் பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது வெளியிட்டுள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக \’டுவிட்டர்\’ மூலம் தாம் எரிக்சொல்ஹெய்முடன் பல தடவைகள் தொடர்பு கொண்டு கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக இதன் போது நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை விவகாரங்கள் தொடர்பில் தனது உதவிகள் தேவைப்பட்டால், தான் அதற்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக நிஷா தேசாய் பிஸ்வாலிடம் எரிக் சொல் ஹெய்ம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணையாளராக நோர்வே இருந்த போது, இவ்விடயங்களைக் கையாள்வதற்காக இலங்கைக்கான சிறப்புத் தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, இலங்கை தொடர்பிலான தன்னுடைய தற்போதைய முயற்சிகளுக்கு எரிக்சொல்ஹெய்மின் அனுபவங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகக் கூறப்படுகின்றது.

இதனிடையில், வோஷிங்டனில் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிஷா தேசாய் பிஸ்வாலுடன் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்குமான உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வருவதாக இச்சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார் எரிக் சொல் ஹெய்ம்;. அதேவேளை, எரிக் சொல்ஹெ முடனான சந்திப்புக் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள நிஷா தேசாய் பிஸ்வால், இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பு, ஜனநாயக உரிமைகள் மற்றும் அம்மக்கள் மீதான அவரின் கரிசனை தன்னை ஈர்த்துக் கொண்டதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாலகனை பயங்கரவாதி

TPN NEWS

SHARE