எரிபொருள் விலைநள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்குறைப்பு

106

 

இன்று நள்ளிரவு (31) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 95 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீட்டருக்கு 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.

92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலை மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த திருத்தத்தின் ஊடாக எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

உயரும் ரூபாவின் பெறுமதி
மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தின் போது ஒக்டேன் 95 பெட்ரோல், சுப்பர் டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்பட்டது.

எனினும், டீசல் மற்றும் ஒக்டேன் 92 பெட்ரோல் ஆகியவற்றின் விலை குறைக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர் வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாகவும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதன் காரணமாகவும் ஏப்ரல் மாதத்திற்கான விலை திருத்தத்தின் போது எரிபொருட்களின் விலை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE