எரிவாயு கொள்கலன்களை ஏற்றிய சுமை ஊர்தியை துரத்திச் சென்ற டயனா கமகே

317

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே (Diana Gamage) சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக எரிவாயு கொள்கலன்களை ஏற்றிய சுமை ஊர்தியை துரத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

வீட்டில் சமையல் எரிவாயு முடிந்த பின்னர், எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக வீதிக்கு வந்தாக அவர் கூறியுள்ளார். பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் எரிவாயு இருப்பதாக டயனா கமகே கேள்விப்பட்டுள்ளார்.

அங்கு சென்ற போது, எரிவாயு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் அத்துருகிரியவில் எரிவாயு கிடைப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து அவர் அத்துருகிரிய நோக்கி சென்ற போது, எரிவாயு கொள்கலன்களை ஏற்றிய சுமை ஊர்தி வீதியில் சென்றுள்ளதுடன் அதன் பின்னால் சென்ற அவர், ஒருவல பிரதேசத்தில் விற்பனை நிலையம் ஒன்றில் எரிவாயுவை கொள்வனவு செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக டயனா கமகே தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE