எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் நிறைந்த சீஸ்

338
கால்சியம் நிறைந்த சீஸ்

சீஸ்
‘சீஸ்’ என அழைக்கப்படும் பாலாடைக் கட்டி நமது உணவுப் பொருட்களின் பட்டியலில் நீங்காத இடம் பிடிப்பவை. உணவுக்கு மணமும், சுவையும் தரும் சீஸ், உடலுக்கு அத்தியாவசியமான பல சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. அதன் சத்துக்களை பார்க்கலாம்.
சீஸ், பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பசு, எருமை, ஆடு, ஒட்டகம் ஆகியவற்றின் பாலில் இருந்து சீஸ் தயாரிக்கப்படுகிறது. சீஸ், உடலில் உள்ள சத்துப் பொருட்களை சம நிலைப்படுத்த உதவுகிறது. இதில் உடலை செரிவூட்டும் சத்துப்பொருட்களான புரதம், வைட்டமின் மற்றும் கார்போ-ஹைட்ரேட் போன்றவை நிறைந்துள்ளன. தாதுப் பொருட்கள் அதிக அளவில் காணப்படுவதால் ரத்த சோகை, உடல் சோர்வு, இருமல் போன்றவற்றுக்கு சிறந்த மருந்துப் பொருளாக செயல்படுகிறது.
எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் பொருட்கள் சீஸில் நிறைந்துள்ளன. 100 கிராம் பாலாடைக் கட்டியில் 28.5 கிராம் அளவிற்கு கால்சியம் உள்ளது. பற்களின் உறுதிக்கும் கால்சியம் அவசியம்.
‘வைட்டமின்-பி’ சத்து பாலாடைக் கட்டியில் குறிப்பிட்ட அளவில் காணப்படுகின்றன. இவை உடற்செல்களின் வளர்ச்சியில் பெரிதும் பயன்படுகின்றன. சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. பாலாடைக் கட்டியில் 50 சதவீதத்திற்கு மேல் கொழுப்பு பொருட்கள் இருப்பதால் மெலிந்தவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.
‘டிரிப்டோபான்’ எனப்படும் அமினோ அமிலங்கள் பாலாடைக் கட்டியில் காணப்படுகிறது. இவை தூக்கமின்மையை போக்குவதுடன், உடல் வலியையும் நீக்கும். பார்வைத் திறனை மேம்படுத்தும் ரெட்டினா செல்களின் செயல்பாட்டை தூண்டும் ஆற்றல் பாலாடைக் கட்டிக்கு உண்டு. செரிமானத்தை தூண்டும் சத்துப் பொருட்கள் இதில் காணப்படுவதால் சீஸ் சிறந்த செரிமான காரணியாக விளங்குகிறது.
SHARE