எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார். நடிகை லட்சுமி மேனனிடம், ‘விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்து லட்சுமிமேனன், ‘கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடிக்க தயார்’ என்று கூறியுள்ளார்.
விஷால் – லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இத்திரைப்படத்தை திரு இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இந்த திரைப்படம் திரைக்கு வருவதை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் புதன்கிழமை (03) நடைபெற்றது.
இதில் விஷால், லட்சுமி மேனன், இனியா, இயக்குனர் திரு, யுடிவி தனஞ்செயன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதன்போது, திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக் காட்சி தொடர்பில் நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.
‘இத்திரைப்படத்தில் நானும் லட்சுமி மேனனும் இடம்பெறும் முத்தக்காட்சி, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இடம்பெறும் முத்தக்காட்சிப் போன்று கிடையாது. இது பரபரப்பாக பேசக்கூடிய அளவுக்கு பெரிய விசயம் இல்லை. படத்தில் ஒரு செகண்ட் மட்டுமே வரக்கூடிய காட்சி அது. அதுவும் இக்காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. கதைக்கு தேவைப்பட்ட காரணத்தாலேயே இக்காட்சி எடுக்கப்பட்டது’ என்றார் விஷால்.
தணிக்கைக் குழு இப்படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மீண்டும் இப்படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். ‘யு’ சான்றிதழ் வாங்க முயற்சி செய்கிறோம். அவர்கள் கேட்டுக்கொண்டால் படத்தில் தேவையற்ற காட்சிகள் நீக்கப்படும் என்றும் விஷால் கூறினார்.
மேலும் இத்திரைப்படம் ஆரம்பிக்கும்போது ஏப்ரல் 11இல் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் இசையும், படமும் நன்றாக வந்திருக்கிறது. இதற்கு இசையமைப்பாளருக்கும் இயக்குனருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் விஷால் குறிப்பிட்டார்.
இத்திரைப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில், ‘நான் சிகப்பு மனிதன் தலைப்பில் ஏற்கனவே ரஜினி நடித்துள்ளார். அதே தலைப்பில் வெளியாகும் இத்திரைப்படத்துக்கு தலைப்பை மட்டுமே பயன்படுத்தி புதிய கதையோடு களமிறங்கியிருக்கிறோம். ரசிகர்களுக்கு விருந்தாகவும் இத்திரைப்படம் அமையும்’ என்றார்