ஏஞ்சலினா அரசியலில் குதிக்க முடிவு…

383

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கும், 39, அரசியல் ஆசை வந்துள்ளது. ஹேக்கர், அலெக்சாண்டர், வாண்டட், சால்ட் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள ஜோலி, கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். சமூக சேவையில் ஆர்வம் உள்ள ஜோலி, ஏற்கனவே சில குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மறுவாழ்வு துறையின் சிறப்பு தூதராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் கூறுகையில்,ஏற்கனவே சமூக சேவையில் ஈடுபாடு காட்டி வருகிறேன். எதிர்காலத்தில் அரசியலில் இணைந்து, மக்களுக்காக பணியாற்றும் திட்டமும் உள்ளது. ஆனாலும், இந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க விரும்புகிறேன், என்றார்.

 

SHARE