ஏனைய செய்தி பெண் வழக்கறிஞரை துடித்துடிக்க கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்

431
இஸ்லாமிற்கு எதிரான கருத்தை வெளியிட்டதாக ஈராக்கை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.ஈராக்கை சேர்ந்த சமிர் சலி அல்-நுடாமி (Sameera Salih Ali al-Nuaimy) என்ற பெண் வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இவர் பேஸ்புக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மொசூல் (Mosul) பகுதியில் உள்ள சமய அடையாளங்களை அழிக்கிறார்கள் என தகவல் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.

இதை பார்த்து ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், அவரை கடந்த 17ம் திகதி கைது செய்து இஸ்லாமிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன், இவர் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்தை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன்பின் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நுடாமியை, தொடர்ந்து 5 நாட்களாய் சித்ரவதை செய்த தீவிரவாதிகள், நேற்று பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

இச்சம்பவம் ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் காட்டுமிராண்டித்தனத்தை காட்டுவதாக ஐ.நா. தூதர் நிக்கோலாய் மிலேடெனொவ் (Nicoloy Mileydenav) தெரிவித்துள்ளார்.

 

SHARE