ஏரிகளால் சூழ்ந்த இயற்கை பூங்கா 

452
குரோஷியாவில் அமைந்துள்ள Plitvice Lakes National Park என்ற தென் கிழக்கு ஐரோப்பாவின் பழமைவாய்ந்த தேசிய பூங்கா ஏரிகளால் நிறைந்துள்ளது.

1949ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பூங்கா, சுமார் 297 சதுர கிலோ மீற்றர்களில் அமைந்துள்ளது.

இந்த தேசிய பூங்கா அதில் உள்ள ஏரிகளுக்காக புகழ்பெற்றது. அங்கு சுமார் 16 ஏரிகள் தற்போது உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது.

இந்த பூங்காவில் எண்ணற்ற அழகிய ஏரிகள், குகைகள் மற்றும் நீரூற்றுகளும் அமைந்துள்ளன.

இயற்கை சார்ந்த இடமாக விளங்கும் இந்த பூங்காவில், ஐரோப்பிய ப்ரவுன் பியர், ஓநாய் மற்றும் சுமார் 126 வகை பறவைகளின் வீடாக பூங்கா அமைந்துள்ளது.

இந்த அழகிய பூங்காவினை 1979ம் ஆண்டு உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளனர்.

இங்குள்ள 16 ஏரிகளும் பல வித மினரல்களை தன்னில் கொண்டுள்ளது அதன் சிறப்பம்சமாகும்.

ஆனால் இந்த ஏரிகள் எவற்றிலும் சுற்றுலாவாசிகள் குளிப்பதற்கு அனுமதி அளிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏரிகள் அமைந்துள்ள இடத்தில், பல இயற்கையான அணைகளும் உருவாகியுள்ளன.

ஏரியில் ஓடும் நீர் பார்ப்பதற்கு கண்ணாடி போல் சுத்தமாக உள்ளதோடு எண்ணற்ற உயிரினங்களுக்கு முக்கியமான அம்சமாக விளங்குகிறது.

மேலும், அந்த ஏரிகள் அனைத்தும் upper lakes மற்றும் lower lakes என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் சுமார் 1 மில்லியன் சுற்றுலாவாசிகளுக்கும் அதிகமானவர்கள் சென்று வரும் இந்த அதிசய பூங்காவில் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

மேலும், இரண்டாம் உலகப்போர் முடிந்ததை அடுத்து இந்த இடம் சுற்றுலாவாசிகளின் மனம் கவர்ந்த இடமாக மாறத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE