ஏலத்தில் விடப்படும் மலாலாவின் ஓவியம்

775
பாகிஸ்தானில் பெண்களின் உரிமைக்காக போராடிய மாலாலாவின் ஓவியம் ஏலத்திற்கு வருகிறது.பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா, பெண்களின் உரிமை மற்றும் அவர்களின் கல்விக்காக போராடி தலிபான்களின் தாக்குதலுக்கு ஆளான இளம் பெண் ஆவார்.

இந்த செயலுக்காக பல்வேறு நாடுகளின் விருதுகளை பெற்றுள்ள இவர், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

இவரது முழு உருவ ஓவியம் ஒன்று இங்கிலாந்தின் தேசிய ஓவிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

இந்த ஓவியம் அடுத்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலமிடப்படுகிறது. இதுகுறித்து பிரபல ஓவியர் ஒருவர் கூறுகையில், இந்த ஓவியம் சுமார் ரூ.50 லட்சம் வரை ஏலம் போகும் என்று தெரிவித்துள்ளார்

SHARE