ஏழாலை தெற்கு விவசாய சம்மேளனத்தினால் உருளைக்கிழங்கு அறுவடை விழா நேற்று காலை ஊரெழு வடக்கு உருளைக்கிழங்கு உற்பத்தி கிராம பகுதியில் சம்மேளன தலைவர் தங்கராசா தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் விவசாய பெருமக்களுடன் இணைந்து உருளைக்கிழங்கு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.
உருளைக்கிழங்கிற்கு 50 சதவீத இறக்குமதி வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளதுடன்இ சிறந்த சந்தை வாய்ப்புடன் 80 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மாற்று பயிர் செய்கையாகவும்இபணப்பயிர் செய்கையாகவும் விவசாயிகளுக்கு கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிப்பதாகவும் ஸ்ரீலங்கா தமிழர் ஒன்றிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இரமாநாதன் குறிப்பிட்டிருந்தார்.
விவசாய பிரதி அமைச்சராக தனது சேவைகாலத்தில் சிறந்த நடைமுறைகளின் மூலம் விவசாயிகளிற்கு சிறந்த அனுகூலங்களை பெற்று வழங்கியதன் மூலம் இன்று அதன் அறுவடையை பெற்று வருவதாகவும்இதொடர்ச்சியாக விவசாய பெருமக்களின் நலன் கருதி சேவைகள் இடம் பெறும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் நிர்வாக கிராம அலுவலர்இபிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்இ உடுவில் கமநல சேவை நிலைய பெரும்பாக உத்தியோகத்தர்கள்இ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்இ யாழ் மாவட்ட கமக்கார அமைப்பின் தலைவர் தியாகலிங்கம்இ ஏழாலை தெற்கு விவசாய சம்மேளன தலைவர் வலிகாமம் இணைப்பாளர் திருஞானம் ஞானசீலன்இவலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் ரதீஸ்வரன்இவலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ஆதவன் ஆகியோருடன் கிராம விவசாய மக்கள் நிகழ்வில் இணைந்திருந்தனர்.