நடிகர் அஜித் திரையுலகில் அறிமுக செய்து வைத்த இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இந்தியளவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் இவர், முதன் முதலில் அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கினார்.
முதல் படமே முருகதாஸுக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது. இதன்பின் ரமணா, கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி என தொடர் வெற்றிகளை கொடுத்து வந்தார். இந்த படங்களில் கஜினி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தவர் சூர்யா கிடையாது. அஜித் தான் கஜினி படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தார்.
உருவ கேலி செய்தாரா அஜித்
முதலில் இப்படத்திற்கு மிரட்டல் என தலைப்பு வைத்திருந்தனர். அதன் போட்டோஷூட் புகைப்படங்கள் கூட இருக்கிறது. இந்நிலையில், கஜினி படத்தை இயக்குவதற்காக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ரூ. 1 கோடி சம்பளமாக கேட்டாராம்.
இதை கேட்டவுடன், ரூ. 1 கோடி பணத்தை முருகதாஸ் பக்கத்தில் வைத்து பாருங்க, அந்த பணத்தை விட அவர் உயரமாக இருந்தால், அந்த சம்பளத்தை அவருக்கே கொடுத்து விடுங்கள் என அஜித் கூறியதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார்.
இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஒரு வேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், மிரட்டல் படத்திற்கு பின்பு இரு முறை அஜித்தை வைத்து படம் இயக்கவிருந்தார் முருகதாஸ். ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை.
இப்படியொரு பேச்சை கேட்டபிறகு ஒருவர் எப்படி, அதே நபருடன் பேசி கொண்டு இயல்பாக இருக்க முடியும். அஜித் இப்படி கூறியிருந்தால், தனது வாழ்நாளில் அஜித்தை அவர் சந்தித்து இருக்கவே மாட்டார். ஆனால், அதன்பின் பல முறை அஜித்தை நேரில் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.