ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஆயு­தப்­ப­டை­களை இலங்­கைக்குள் கள­மி­றக்­க­வில்லை – மேஜர் ஜெனரல் ரொஷான் சென­வி­ரத்ன

276

ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஆயு­தப்­ப­டை­களை இலங்­கைக்குள் கள­மி­றக்­க­வில்லை. எனவும் இலங்­கையின் பாது­காப்­பு ­ப­டை­களின் பாது­காப்பில் மட்­டுமே இலங்கை உள்­ளது என இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

நாட்டின் நெருக்­கடி நிலை­மை­களை அடுத்து இலங்­கைக்குள் அமெ­ரிக்க இரா­ணுவம் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்­திகள்  வெளி­வ­ரு­கின்ற நிலையில் அதன் உண்­மைத்­தன்மை குறித்து வின­விய போதே இரா­ணுவ ஊட­கப்­பேச்­சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் சென­வி­ரத்ன இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்.

இலங்­கைக்குள் எந்­த­வித சர்­வ­தேச இரா­ணுவ படை­களும் கள­மி­றக்­கப்­ப­ட­வில்லை, குறிப்­பாக ஐக்­கிய அமெ­ரிக்­காவின் இரா­ணு­வப்­ப­டைகள் இலங்­கைக்குள் குவிக்­கப்­பட்­டுள்­ள­தாக தொடர்ச்­சி­யாக கேள்வி எழுப்­பப்­பட்டு வரு­கின்­றது. இதற்கு சில புகைப்­ப­டங்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்டும் வரு­கின்­றன.

ஆனால் எமது பாது­காப்பு படை­யினர் மாலி தீவு­க­ளுக்கு அனுப்­பப்­ப­ட­வுள்ள கார­ணத்­தினால் எமது இரா­ணுவ வாக­னங்கள் சில பரி­சோ­திக்­க­பட்டு வரு­கின்­றன . இந்த வாக­னங்கள் அனைத்­துமே  எமக்கு ஐக்­கிய நாடுகள் அமை­திப்­படை மூல­மாக வழங்­கப்­பட்ட வாக­னங்கள். அவற்­றையே நாம் பரி­சோ­தனை செய்து தயார்­ப­டுத்தி வரு­கின்றோம். அந்த புகைப்­ப­டங்­களை வைத்­துக்­கொண்டே சில வதந்­திகள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றது.

எனினும் அமெ­ரிக்க இரா­ணுவ படை­களை இலங்­கைக்குள் கொண்­டு­வ­ர­வில்லை. அவர்கள் வரு­வ­தாக கோரவும் இல்லை. இலங்­கையில் தற்­போது நிலவும் பதற்­ற­மான  நிலை­மை­களை கையாள எமது முப்­ப­டை­யினர் மற்றும் பொலிஸ் மட்­டுமே ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. நிலை­மை­களை  வழ­மைக்கு கொண்­டு­வந்­துள்ளோம்.

மக்கள் எந்­த­வித அச்­சமும் இன்றி அமை­தி­யாக வாழக்­கூ­டிய சூழல் இன்று நில­வு­கின்­றது. ஆகவே பொய்­யான தக­வல்­களை சிலர் பரப்­பு­வதன் மூல­மாக மக்­களின் இயல்பு வாழ்­கையை குழப்­பவே முயற்­சித்து வரு­கின்­றனர்.

மேலும் தொடர்ச்­சி­யாக தேடுதல் நட­வ­டிக்­கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் சகல பகுதிகளிளும் முப்படையினர் குறிப்பாக இராணுவம் மற்றும் பொலிஸ் தரப்பினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE